Monday, December 14, 2015

ஞாநி மீது மை!

(22, அக்டோபர் FB)  

ஞாநியை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்  ̀பாப்பான்' என்று திட்டி கருத்தியல் மையடித்தவர்கள், இப்போது துலமாக மையடிக்கப் போவதாக சொன்ன செயலை கண்டிப்பது சுவாரசியமாக உள்ளது. தன்னை பெரியாரிஸ்ட் என்று சொல்லிக் கொள்பவரின் மனதின் உள்ளே 'சோதான் அமர்ந்து இருக்கிறார்' என்று சொல்வதை விட, ஒரு சிவசேனாக்காரன் பூசப்போகும் கருப்பு மை என்ன கறையை அவர் மீது சேர்க்கப் போகிறது? 'இந்துத்வ வாதிகளை விட ஆபத்தான் ஆள் இந்த ஞாநிதான்' என்றும், 'முற்போக்கு வேஷமிடும் ஒரு ஆரெஸ்ஸெஸ்காரர்' என்றும் ஞாநியை திட்டியதைவிடவா பெரிய கறையை சிவசேனா மையடித்து உருவாக்கிவிட முடியும்! மற்றவர்களாவது ஏதோ அரசியல் காரணங்களுக்காக ஞாநி மீது கருத்தியல் மை அடித்தார்கள். எந்த அரசியல் உள்ளடக்கமும் இல்லாமல், தமிழகத்தின் போற்றவேண்டிய பொக்கிஷத்தின் மீது கருத்தியல் மை அடிப்பதில் ஞாநி எவ்வளவு தாழ்ந்துபோகக் கூடியவர் என்பதற்கும் உதாரணங்கள் ஒன்று இரண்டு என்ற எண்ணிக்கையில் இல்லை. அவரது வாதங்களுக்கு எதிரான அசைக்க முடியாத ஆதரங்களை காட்டிய பிறகும் கிஞ்சித்தும் வெட்கமின்றி அவர் காட்டிய பிடிவாதமும், உண்மை ஞானிகளை மேலும் மேலும் மூர்க்கமாக செய்த அவதூறுகளை எந்த சந்தர்ப்பத்திலும் மறப்பதில்லை

ஆனாலும் ஞாநியை பார்பனிய சிந்தனை கொண்டவராக நான் நினைக்கவில்லை; இந்துத்வத்தையும் சமரசமின்றி எதிர்க்கக் கூடியவராகத்தான் அவரை காண்கிறேன். மொண்ணைத்தனமும், முட்ட்டாள்தனமும் கொண்ட அவரது சிந்தனையால் அறிவுலகத்திற்கும், அரசியல் உலகிற்கும் எந்த பயனும் இருப்பதாக நான் கருதாவிட்டாலும், சிவசேனை என்ற இந்துத்வ லும்பன் அமைப்பு விடுக்கும் மிரட்டலை வன்மையாக இந்த சந்தர்ப்பத்தில் கண்டிக்கிறேன். அவரது மூர்க்கத்தனத்தையும் முட்டாள்தனத்தையும் கண்டித்ததை அன்றி, அவர் மீது கருத்தியல் மை அடிக்காத, அவ்வாறு கும்பலாக சிலர் அடித்தபோது -குறிப்பாக அந்த வாணிமகால் சுவிசேஷக் கூட்டத்திற்கு- எதிர்ப்பு தெரிவித்த எனக்கு, இந்த சந்தர்ப்பத்தில் சிவசேனையை கண்டிக்க தார்மிக உரிமையும் இருப்பதையும் உணர்ந்து கண்டிக்கிறேன்.

1 comment:

  1. இப்பதான் பாத்தேன். குரங்கு கிட்ட போய் என்னை பிராண்டுவியா பிராண்டுவியான்னு முகத்தை காட்டி காட்டி திரும்ப திரும்ப கேட்டா அது பிராண்டலைன்னாதான் ஆச்சரியம்; ஆமாம் அப்படித்தான் பிராண்டுவோம்னு தன் இயல்புக்கு மாறா சொன்னதை, (கண்டிச்சு வெளியேறக்கூட செய்யாம தொடர்ந்து பேசிட்டு) வெளியே வந்து ஒரு மேட்டாரா பேசுவதும், அறிஞர் பெருமக்கள் கூட்டமா கண்டிக்கறதும்… கொடுமை! நாங்கூட ஏதோ பிராண்டபோறோம்னு மிரட்டல் அங்க இருந்து தன்னிச்சையா வந்ததா நினைச்சு ஏமாந்து கண்டித்துவிட்டேன். (23, அக்டோபர் FB)

    ReplyDelete