Monday, December 14, 2015

ஹிபாக்ரசியின் வெற்றி

அடித்தளம் அதுதான் எனினும், ஜெயலலிதாவின் வெற்றியை அடித்தட்டு மக்களின் அறியாமையின் விளைபொருளாக சாரம்சப்படுத்துவது முழுக்க முட்டாள்தனமும் நேர்மையின்மையும் கொண்டது. திமுக அரசுகளின் சீரழிவுகளாக கருதுவதன் எதிர்வினைகள் சரித்திரத்தில் பாதை பிறழ்ந்த ஒரு அரசியல் விபத்து என்றும் அணுகலாம் என்றாலும், ஜெயலலிதா எந்த விதத்திலும் அந்த சீரழிவுகளுக்கு எதிரான குறியிடு அல்ல; ஒருவேளை எம்ஜியாரை அந்தவகையில் திமுகவிற்கான எதிர்வாக கருதலாம்; அதைவிட மோசமான சீரழிவுகளின் காரணியாக ஜெயலலிதா அரசு இருப்பது திமுக எதிர்பாளர்களுக்கு தெளிவாக தெரியும். அந்தவகையில் ஊழலையும், சீரழிவுகளையும் எதிர்ப்பதாக கற்பித்துக் கொண்ட மேற்தட்டின் மோசமான ஹிபாக்ரசியின் ஆதாரபூர்வமான சமூகக் குறியீடுதான் ஜெயலலிதாவின் தொடர் வெற்றி.

No comments:

Post a Comment