(சில நாட்கள் முன் ட்வீட்லாங்கற்றில் எழுதியது)
பொதுவாக ஃபேஸ்புக்கில் அச்சுபிச்சு விம்ர்சனங்களை கண்டு கொள்ளாமல் தாண்டி செல்வதுதான் வழக்கம். இன்று@arulselvan எழுதிய ட்வீட்டை படித்து, உடனே இரைச்ச்சல் செல்லா பிரியா தம்பி எழுதிய வழக்கமான மொக்கை ' ஆர்டிகிளை' பாரட்டியதை பார்த்ததும் ஏதோ தோன்றியது. மற்றபடி கடைசி வரியில் சொல்வது போலத்தான். ராஜாவை பற்றி நாம் புரிந்து கொள்ளவும் பேசவும் ஆயிரம் ஆண்டுகள் உள்ளன. இப்போதே வழங்கும் தீர்ப்புகள் சொல்பவரின் அகந்தையைத்தான் காட்டுகின்றன. கீழே ஃபேஸ்புக்கில் எழுதியது:
இளையராஜா யாருடனும் ஒப்பிடமுடியாத இசை மேதை மட்டுமல்ல, எந்த வித சமரசமும் இல்லாத, தனக்கு தோன்றியதை அப்படியே சொல்ல எந்த தயக்கமும் இல்லாத விமர்சகனும் கூட. மாபெரும் கலைஞனாக இருப்பதன் இன்னொரு பரிமாணம்தான் இது. இந்த பண்பிலும் ராஜாவுடன் ஒப்பிடக்கூடிய கலைஞர் யாருமில்லை. எம்எஸ்வி தமிழகம் தந்த மாபெரும் கலைஞர்தான்; ஆனால் இசை மேதமையில் மட்டுமல்ல, இசை சார்ந்த தத்துவ ரீதியாக தன்னை முன்வைப்பதிலும் ராஜாவுடன் எந்த விதத்திலும் ஒப்பிட முடியாதவர். தன்னை பற்றிய அகந்தை அவருக்கு இல்லாமல் இருப்பது இயல்பானதும் போற்றுதலுக்கு உரியதும் ஆகும். ராஜா அல்பங்களுக்கு நடுவில் அகந்தையுடன் இருப்பது அதை விட போற்றுதலுக்கு உரியது ஆகும். அரையும் குறையுமான அரசியல் அறிவை மட்டும் வைத்து விமர்சனங்கள் எழுதி குவிப்பவர்களுக்கு இந்த அகந்தையின் சரித்திர முக்கியத்துவம் புரியப்போவதில்லை. பெரும் phenomenonகளை குறித்து தங்களது அற்ப அறிவு விசாலத்தினால் புரிந்து கொண்டுவிட முடியும் என்று நினைப்பவர்கள் ராஜாவை விமர்சிக்கிறார்கள். சரித்திரம் இப்படிப்பட்ட அற்பத்தனங்களுடனேயே பயணிக்கும்; வேறு வழியில்லை. ஆனால் ராஜா என்ற மாபெரும் கலைஞனை பற்றி பேசிக்கொண்டே இருக்க இன்னமும் (உலகம் இருந்தால்) பல ஆயிரம் ஆண்டுகள் உள்ளன.