Friday, December 18, 2015

எதிர்வினைகள் - 17, டிசம்பர்

பேசவே தகுதியில்லாத விஷயத்தை, அதுவும் இந்த நெருக்கடி நேரத்தில் பேசக்கூடாது என்று முடிந்து மட்டும் இருந்து பார்த்துவிட்டேன்; தமிழ் வெகுஜன மனநிலை என்பது பொறுக்கி மனநிலையை பெருமளவில் கொண்டது என்ற என் கருத்திற்கு, சமீபத்திய அனர்த்தத்தில் பலரின் தன்னார்வ பணி, ஒரு மறுக்கும் ஆதாரமாக இருப்பதாக நினைத்தேன். ஆனால் தமிழ் சூழல் இந்த மாதிரி எல்லாம் ஒரு வாரம் கூட தொடர்ந்து நினைக்க விடாது. சிம்புவும் அநிருத்தும் நிஜமாகவே வெளியிட்டார்களா, அல்லது லீக்கானதா என்பது இன்னமும் சரியாக தெரியாது; ஆனால் இப்படிப்பட்ட நேரத்த்தில் இப்படி ஒரு வேலை செய்ய எல்லா சமுகத்திலும் யாராவது இருக்கத்தான் செய்வார்கள். ஆனால் தமிழகம் இவ்வளவு பெரிய பேரிடரை சந்தித்தித்து இன்னமும் எதிர்கொண்டிருக்கும் போது, இதை ஒரு மேட்டராக இத்தனை பேர்கள் இத்தனை முறை பரவலாக விவாதித்தது போல், வேறு ஏதாவது ஒரு சமுகத்தில் நடக்குமா என்று தெரியவில்லை. அதெப்படிப்பா அடுத்த வாரமே இதை ஒரு மேட்டராக எல்லோரும் - எதிர்மறையாக என்றாலும் - விவாதித்து கொண்டிருந்தீர்கள்? இதில் வெள்ள நிவாரணம் பற்றி பேச வந்த இடத்தில், இளையராஜா போன்ற மேதையிடம் பீப் சாங் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் கோபப்படக் கூடாது என்று தற்குறிகளின் அறிவுரைகள் வே று; ரவி சங்கரோ, சங்கராச்சாரியாரோ, கருணாநிதியோ, மோடியிடமோ, ஜெயலலிதாவிடமோ யாராவது இப்படி கேள்வி கேட்பார்களா? சிம்புவைவிட அதை விவாதித்தவர்கள் எவ்வளவு விவஸ்தை கெட்டவர்களோ, அதே போல கேள்வி கேட்ட நபரை விட நிஜமான பொறுக்கி மனநிலையை கொண்டவர்கள் ஃபேஸ்புக் ட்விட்டரில் நியாயம் பேசுபவர்களே!

***                                             ****                                          *****

இலக்கியம் என்பதில் எவ்வளவு பெரிய மொள்ளமாரித்தனங்கள் ஏமாற்றுவேலைகள் பொறுக்கித்தனங்கள் சாத்தியம் என்று தமிழ் உலகின் மூலம் உலகிற்கே நிருபித்தவன், ஒரு பேரழிவு நடந்த நேரத்தில் அதை நிகழ்த்திய ஆளுங்கட்சிக்கு அல்லக்கை வேலை செய்பவன், என்னவெல்லாமோ தார்மிகமாக பேச முடிகிறபோது- தமிழ் மசாலா சினிமாவின் கதையை புரிந்து கொள்ள முடியாத அடி முட்டாள், நாலு உலகப்படத்தை திருட்டு விசிடியில் பார்த்து விமர்சகனாகும் போது - ஜெயலலிதாவிடம் ஏரியை திறந்து விட்டதை பற்றி சாதரணக் கேள்வி கூட கேட்க முடியாத பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்து ஒரு கலைஞனை எதிர்த்து போராடும்போது- 'என்ன மாதிரி தேசம் இது?' என்று ஆச்சரியம் வரத்தான் செய்யும்!

***                                             ****                                          *****

கேட்க ஆளில்லை என்ற நினைப்பில், இளையராஜாவிற்கு எதிராக அறிவற்ற அயோக்கியத்தனமான இந்த கண்டன ஆர்பாட்டத்தை இந்த இழிபிறவிகள் நிகழ்த்தினால், அதை நாம் அனுமதித்தால், அறிவிற்கு எதிரான ஒரு வரலாற்று கறை தமிழ் சமுகத்தில் அழிக்கவியலாதபடி படிந்துவிடும். இதற்கு எதிராக தெருவில் இறங்க வேண்டும். அவர்கள் எங்கே நடத்துகிறார்களோ அங்கேயே நாம் சொல்வோம். நான் இதை ஒருங்கிணைக்க தயார். தமிழனாக இருப்பதற்கும், தமிழ்நாட்டில் பிறந்ததற்கும் எனக்கு இருக்கும் ஒரே பெருமிதம் இளையராஜா மட்டுமே. இளையராஜா நமக்கு தந்ததற்கு குறைந்தபட்ச நன்றியுணர்வுடன் இவ்வாறு கருதும் அனைவரையும் திரள நான் அழைக்கிறேன்.

https://mobile.twitter.com/icarusprakash/status/677532241988222976

No comments:

Post a Comment