Thursday, December 24, 2015

மாயக்கருத்தியல்

குவாண்டம் மெகானிக்ஸை முன்வைத்து நிறைய மாயயதார்த்த கருத்தாக்கங்கள் உலாவுகின்றன; அங்காங்கே மதம் சார்ந்த வாசிப்புகளும் மூளை மெனெக்கிட்டு நிகழ்கின்றன. அதற்கெல்லாம் கருத்து சுதந்திரம் இல்லை என்று சொல்லமுடியாது; ஜாலியாக நிறைய செய்யலாம், பேசலாம். ஆனால் மனதில் நிறுத்த வேண்டியது - குவாண்டம் மெகானிக்ஸ் இதற்கு முன் மனித அறிவு ஆராய்ந்தடைந்த எந்த கோட்பாட்டையும் விட மிக மிக … மிக கறாரான, கணிதரீதியாக வடிவமைக்கப்பட்ட, கணித சட்டகத்தில் மட்டுமே முன்வைக்கப்பட்ட, அதே நேரம் பல்லாயிரக்கணக்கான நடைமுறை சோதனைகளால் சரி பார்க்கப்பட்ட ஒரு தியரி. அதில் எந்தவித மம்போ ஜம்போவிற்கும் இடமில்லை. இதை புரிந்து கொள்ள வெறும் ஆச்சரியம் கொள்ளும் கலையார்வமும், உணர்வு பூர்வமான உளநிலை மட்டும் போதாது; நிரம்ப மூளை உழைப்புடனான அர்பணிப்பும் வாசிப்பும் தேவை.

No comments:

Post a Comment