என் முதல் பதிவு: Badri Seshadri ராமானுஜனை முன்வைத்து இரண்டு முக்கிய பதிவுகளை எழுதியுள்ளார். அதை முன்வைத்து பேச எனக்கு சில கருத்துக்கள் இருந்தாலும் (விமர்சனமல்ல), இப்பதிவு அதற்கல்ல. Mathematician என்பதற்கு கணிஞர் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தியுள்ளார். இதற்கு முன் யாராவது இந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளனரா தெரியவில்லை, மிக பொருத்தமான சொல்லாக்கமாக தோன்றுகிறது. ரொம்ப சாதரணமாக, இயல்பாக தோன்றியிருக்க வேண்டிய சொல்லாக்கம், கணிதவியலாளன் போன்ற கடூரப்பயணத்திற்கு பின் வந்தடைந்திருக்கிறது ( ̀கணினி' போலவே). ஒருவேளை சிலருக்கு இது பொருத்தமான சொல்லாக இப்போது தோன்றாமல் இருந்தாலும், தொடர்ந்து பயன்படுத்தினால் பொருந்திவிடும். நான் இனி கணிஞன் என்ற சொல்லையே பாவிப்பதாக உள்ளேன்.
Haran Prasanna கணி என்றால் கணினி. கணிஞர் என்பது கணிப்பொறியலாளரைக் குறிக்கும் விதமாகப் பலரால் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கணிஞர் குழப்பத்தையே உருவாக்கும்.
Roza Vasanth கணிப்பொறியாளர் என்று சொல்வதே சரி- அவர் பொறியியலாளராக இருப்பதால். கணிஞர் அதற்கு பொருத்தமானதாக தோன்றவில்லை. ஆனாலும் ஏற்கனவே சிலர் பயன்படுத்தியிருந்தால் குழப்பம்தான். (நான் வாசித்ததில்லை.)
Selvakumar Ramachandran கணிஞர் என்ற சொல்லை திரு. மணி மணிவண்ணன்நீண்ட காலமாக கணினி வல்லுநர்களுக்காக பயன்படுத்தி வருகிறார். கணித வல்லுநர்களை கணிஞர் என்று சொல்வது பொருத்தமானதைப்போல தெரிந்தாலும், கணிஞர் என்ற சொல் கணினித் துறையில் இருக்கும் வல்லுநர்களுக்கு மிகச்சிறப்பாக பொருந்துகிறது.
Roza Vasanth தமிழில் computaionற்கும் (கணக்கு), mathற்கும் (கணிதம்) வேறு வேறு சொல் இல்லாத சிக்கலால் வருகிறதோ என்று தோன்றுகிறது. என் கருத்தில் கணித வல்லுனர்கள் கணித வல்லுனர் என்றே சொல்லவேண்டும்; கணிணி வல்லுனர்கள் கணினி வல்லுனர் என்றே சொல்ல வேண்டும். கணினி துறையில்பங்களிப்பு செய்துள்ளவர்களை கணினியாளர் என்றும், கணிதத் துறையில் பங்களிப்பு செய்துள்ளவர்களை கணிஞர் என்று அழைக்கலாம் என்று தோன்றுகிறது. (கணினித்துறை கணிதத்தின் ஒரு பகுதிதான் என்கிற வகையில் அவர்களைதும் கணிஞர் என்றால் பெரிய தவறாக தோன்றவில்லைதான்.
மணி மணிவண்ணன் கணியன் பூங்குன்றனார் என்ற பெயரில் வரும் கணியர் என்ற சொல்லும் கோள்களின் இடத்தைக் கணித்து ஆரூடம் சொல்பவர்களைக் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால், அவர் ஆசீவகராக இருந்திருந்தால் அது வேறு பொருளைக் குறிப்பிட்டிருக்கும். கணிஞன் என்ற சொல்லைக் கணினித் தொழில்நுட்ப வல்லுநர்களைக் குறிப்பிட 15 ஆண்டுகளுக்கு மேலாகப் புழங்கி வந்திருக்கிறேன். இது பத்ரிக்கும் தெரியும்.
Roza Vasanth /கணிஞன் என்ற சொல்லைக் கணினித் தொழில்நுட்ப வல்லுநர்களைக் / இது கணினித் தொழில்நுட்ப வல்லுநர்கள் முந்திக் கொண்டதால் வந்த பிரச்சனையாக மட்டும் தோன்றுகிறது. உங்களுக்கு, அது பொருத்தமானதாக தோன்றுகிறதா?
மணி மணிவண்ணன் கணி, கணினி, கணிஞர் என்ற வரிசை இயல்பாக எழுந்தது. கணக்கு, கணக்கியல், கணக்காயர் என்ற சொற்களும் ஏற்கனவே உள்ளன. கணிதவியலாளர்களைக் கணிஞர்கள் என்று குறிப்பிட்டால் குழப்பம்தான் வரும். நான் பொறிஞன், கணிஞன் ஆனால் கணிதவியலாளன் அல்லன்.
Roza Vasanth /கணக்கு, கணக்கியல், கணக்காயர்/ நவீன கணிதத்துடன் இந்த வார்த்தைகளுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது என்பதுதான் பிரச்சனை.
மணி மணிவண்ணன் கணக்கு வேறு கணிதம் வேறா?
Roza Vasanth நாம் தரும் அர்த்தத்தை பொறுத்தது. நவீன கணிதம் எந்த பொருளிலும் கணிக்கிடுவது தொடர்பானது அல்ல. அது முழுக்க தர்க்கம் சார்ந்தது.
Roza Vasanth என்னை பொறுத்தவரை தர்க்கம் அதன் முழுமையுடன் செயல்படும் எந்த சட்டகத்தையும் கணிதம் என்பேன்
மணி மணிவண்ணன் அப்படியென்றால் கணியன் பொருந்தலாம். ஆசீவக ஏரணவியலாளர்களைக் கணியர்கள் என்பார்கள்.
Roza Vasanth (நீங்கள் குறிப்பிட்ட பிறகு) கணியன் என்பதும் எனக்கு ஏற்கத்தக்கதாகவே உள்ளது. கணியன் என்பதுடன் வேறு எந்த பொருள் குழப்பமும் இல்லை என்று தமிழ் அறிஞர்கள் ஒருமித்து தெளிவுபடுத்தினால்.
Poovannan Subramani // என்னை பொறுத்தவரை தர்க்கம் அதன் முழுமையுடன் செயல்படும் எந்த சட்டகத்தையும் கணிதம் என்பேன்.//புரியவில்லை சார்.கொஞ்சம் விளக்க முடியுமா?
Roza Vasanth இங்கே logic என்பதை தர்க்கம் என்கிறேன் (வேறு பொருத்தமான வார்த்தை பயன்படுத்தியிருக்கலாம்); முரண்படாத (consistant) என்கிற பொருளில் முழுமையானது என்கிறேன். எந்த ஒரு மொழிதலும் பல வாசிப்புகளுக்கான சாத்தியத்தை கொண்டிருக்கும்; அதில் ஒன்றுக்கு ஒன்று முரண்படலாம். அவ்வாறு பல வாசிப்புகள் சாத்தியமற்ற, ஒற்றை வாசிப்பை மட்டுமே கொண்ட மொழிதலுக்கான எந்த சட்டகத்தையும் கணிதம் எனலாம் என்கிறேன். மிக விளக்கமாக சொல்ல கட்டுரை எழுத வேண்டும்.
Selvakumar Ramachandran ரோசா வசந்த் சார், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ஒரு சொல்லை, வேறொரு துறையில் பயன்படுத்துவது அனாவசிய குழப்பத்தைக் கொடுக்கும். கணிஞன் சொல்லை நானும் தமிழில் தொழில்நுட்பப் பதிவுகள் எழுதும்பொழுது பயன்படுத்தி வருகிறேன். கணினித்துறையில் ஏற்கனவே பயன்பாட்டில்இருப்பது தெரிந்தும் கணிஞன் என்ற சொல்லை கணித வல்லுநர் என்ற பொருளில் பயன்படுத்தியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். நான் கணினி வல்லுநர்களை கணிஞர் என்று குறிப்பதையே தொடர்வேன்.
Arul Selvan கணிதம் என்பதன் வேரும் கணி-தான் என்றாலும் -'தம்' அதை துறையாக மாற்றிவிடுகிறது. கணி என்பதிலிருந்து இரு கிளைகளாக 1. கணி->கணினி->கணிஞர் 2 கணி->கணிதம் -> கணிதவியல் -> கணிதவியலாளர் என்று பிரிவது இயல்பாக உள்ளது. நவீன கணிதம் கணிப்பதையும் உள்ளடக்கி இருப்பதால் இந்த உள்ளிசைவு தேவையாக இருக்கிறது. முழு கணிதவியலையும் கணி/கணிஞர்-என் அழைப்பது ஒரு குறுக்குதலே.
Roza Vasanth கணிதன்? கணிதர்?
Arul Selvan கணிதம்-> கணிதர் என்றால் சரியாகத்தான் இருக்கிறது ஆனால் புதிதாக இருப்பதால் பயன்படுத்தித்தான் வழக்கத்திற்க்கு கொண்டுவர வேண்டும்.
Roza Vasanth /பயன்படுத்தித்தான் வழக்கத்திற்க்கு கொண்டுவர வேண்டும்./ வேற வழி? கணிப்பொறி கணினியானது அப்படித்தானே!
Arul Selvan கண்டிப்பாக. நான் இப்போதிருந்து செய்கிறேன்
Roza Vasanth அப்ப இப்போதைக்கு அறிவிச்சிரலாமா? கணிதர் -mathematician, கணிஞர் -computer scientist; அல்லது ஏதேனும் ஆட்சேபம்? Badri Seshadri மணி மணிவண்ணன்
Badri Seshadri கணிதர் என்பதைப் பயன்படுத்துவதில் ஆட்சேபம் ஏதும் இல்லை. மாற்றிவிடுகிறேன்.
Roza Vasanth ஆனாலும் கவிஞன் என்பது போல் கணிஞன் என்று கவித்துவமாக தெரிந்த சொல்லை இப்படி பிடுங்கிக் கொண்டது வருத்தம்தான்
மணி மணிவண்ணன் அட நீங்க வேற. வலைப்பூ என்ற சொல்லைக் “கவித்துவமாக”ப் படைத்தேன் என்று சிலர் கலைச்சொல்லில் கவிதையா என்று கடிந்தார்கள். கணிஞன் என்ற சொல்லை நான் எடுத்துக் கொண்டபோது கணியன் என்ற சொல்லிலிருந்து வேறுபடுத்திச் சொல்ல வேண்டும், அதே நேரம் கணி என்ற வினைச்சொல், கணினி என்ற பெயர்ச்சொல்லோடு தொடர்பும் இருக்க வேண்டும் என்று எண்ணித்தான் படைத்தேன். கவிஞன் போல, கணிஞன் என்பதும் கலையுணர்வைச் சுட்டிக் காட்டுவதும் எனக்கு ஏற்புடையதாக இருந்தது. நல்ல கணிஞர்கள் கலைஞர்களாக இருக்க வேண்டும்.
Roza Vasanth கணிஞர்கள் கலைஞர்களுடன் ஒப்பிடுவது சரி; அதே நேரம் கணிதம் கவிதை போன்றது
(லக்கி லுக் பதிவில் இருந்து)
Yuva Krishna அநியாயம். கம்ப்யூட்டர் சயின்ஸ் வருவதற்கு பல நூற்றாண்டுகள் முன்பாகவே கணிதம் வந்துவிட்டது. எனவே அந்த விளிப்பு உங்களுக்குதான் சொந்தம். விட்டுராதீங்க!
Roza Vasanth ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளதாலும், அருளின் குறுக்குவதாக சொல்லும் (கம்யூட்டர் சயின்ஸ் கணிதத்தின் ஒரு பகுதி) விளக்கமும் ஏற்கத்தக்கதாக உள்ளது. பத்ரியும் மாற்றிக்கொள்ள ஒப்புகொண்டுவிட்டார். அவ்வளவாக பிடிக்காவிட்டாலும் கணிதர் என்ற வார்த்தையுடன் சமரசம் செய்துகொள்ள வேண்டியதாகிவிட்டது.
Yuva Krishna Roza Vasanth பஞ்சாங்கம் கணிக்கிறவர்களை கூட ‘கணிதர்’ என்கிறார்களாம். பரவாயில்லையா?
(இதை நான் அக்கம் பக்கத்தில் விசாரித்தும், கூகுளிட்டும் உண்மை என அறிந்தேன்; அதன் காரணமாக அடுத்த பதிவு.)

No comments:
Post a Comment