Tuesday, December 29, 2015

கணிஞர்-விவாதம் -2

Badri Seshadri கணிஞன் என்ற வார்த்தையை பயன்படுத்தியபோது பிடித்திருந்தது; பொருத்தம் என பட்டது. பின்னர் Haran Prasanna மற்றும்Selvakumar Ramachandran அது ஏற்கனவே கணிப்பொறியாளர்களுக்கு பயன்படுத்தப்படுவதாக தகவல் சொன்னார்கள்; பின்னர் மணிவண்ணனும் தான் பல காலமாக அவ்வாறு பயன்படுத்தி வருவதாக சொன்னார்; Arul Selvan அது கணினி அறிவியலாளருக்குதான் பொருந்தும், கணிதவியல் என்ற அர்த்தத்தை குறுக்குவதாக சொன்னார்; ஒரு கட்டத்தில் நானும் அதை ஏற்று கணிதர் என்கிற சாதா வார்த்தையுடன் சமரசமாக முடிவு செய்தேன். ஆனால் லக்கி கணிதர் என்பது பஞ்சாங்கம் சொல்லும் சோதிடர்களுக்கு பரவலாக பயன்படுத்தும் வார்த்தை என்ற தகவலை சொன்னபின், நானும் அதை கூகுளிட்டு ஆயிரம் பக்கங்கள் வந்தபின், அதை நிச்சயம் பயன்படுத்தலாகாது என்ற முடிவிற்கு வந்தேன். கணியன் என்பதும் கேரளத்தில் சோதிடர்களுக்கான வார்த்தை என்று அறிகிறேன்.
கணிஞர் என்பது நிச்சயமாக கணிப்பொறியாளர்களுக்கு பொருந்தாது; கவிதைகள் படைப்பவரே கவிஞர்; கவிதைகள் நிறைய தெரிந்தவரை அவ்வாறு அழைக்கலாகாது. கணினி விஞ்ஞானியை அவ்வாறு அழைப்பது பொருந்தலாம். கணிதத்தில் பங்களிப்பவரை அவ்வாறு அழைப்பதில் பிரச்சனை இருப்பதை ஒப்புக்கொள்கிறேன். கணிதம் என்பதன் பொருளை கணிஞர் குறுக்குவது, தமிழில் math, compute என்ற இரண்டு பொருட்களை வேறுபடுத்தும் சொற்கள் இல்லாததன் பிரச்சனை என்று தோன்றுகிறது. theoreitical computer science கணிதத்தின் ஒரு பகுதிதான் என்ற வகையில் கணிஞன் என்ற வார்த்தையை பொதுவாக ஒப்புக்கொள்ளலாமோ என்று தோன்றுகிறது; இதைவிட பரந்த பொருள் கொண்ட சிறந்த வார்த்தை கிடைக்காத பட்சத்தில், எனக்கு இது இருப்பதில் ஏற்கத்தக்கதாகவே உள்ளது (கணினியாளர்கள் பிரச்சனை செய்யாதிருப்பின்). கணிதவியலாளர் என்பது இயல்பாக இல்லை. ஒருவேளை கணினித்துறை தோன்றாமலே இருந்தாலும் கணிதம் இருந்திருக்கும்; அப்போது இந்த குழப்பம் வந்திருக்காது. மக்கள் திரும்பவும் முதலில் இருந்து கருத்து சொல்லியாக வேண்டியுள்ளதற்கு மன்னிக்கவும்.
தமிழில் நவீன கணிதம் குறித்து பரவலாக எழுதாத நிலையில் (கணினி குறித்து எழுதும் நிலையில்) இது பெரிய பிரச்சனை இல்லை; ஒருவேளை எழுதத் துவங்கினால் இதை தீர்த்தாக வேண்டியுள்ளது.

மணி மணிவண்ணன் கணி - வினைச்சொல்
கணினி - கணிப்பான், கணிப்பொறி - பெயர்ச்சொல்
கணிஞர் - கணினியைப் புழங்கிக் கணிப்பவர்.

கணிதம்/கணிதவியல்

இதில் கணிதவியல் வல்லுநர்களை நுட்பமாக வேறுபடுத்திக் காட்ட வேண்டும். இரு துறைகளும் ஒன்றல்ல. ஒரே சொல்லைப் புழங்குவதில் உள்ள சிக்கல் இதுதான். இரு வேறுபட்ட துறைகளை ஒன்றாகப் பார்ப்பது.

கணினியில் ஒரே விளைவைப் பல்வேறு முறைகளில், வெவ்வேறு கணிமொழிகளிலோ, அல்லது வெவ்வேறு கணிஞர்களால் ஒரே கணிமொழியிலோ ஏற்படுத்திக் காட்ட முடியும். அதனால்தான் அதுவும் ஒருவிதக் கலை என்று கொள்ளலாம்.
கணிதம் அப்படிப்பட்டதல்ல.

Roza Vasanth /கணினியில் ஒரே விளைவைப் பல்வேறு முறைகளில், வெவ்வேறு கணிமொழிகளிலோ, அல்லது வெவ்வேறு கணிஞர்களால் ஒரே கணிமொழியிலோ/ theoretica computer scientist என்பதையே நீங்கள் கணிஞர் என்று அழைப்பதாக நினைத்தேன். ஆனால் நீங்கள் கணினி மொழியில் program எழுதுபவரை சொல்வது போல்தெரிகிறது. இது மேலும் குழப்பத்தை தருகிறது. அடுத்து எது கலை என்பதற்கும், இந்த சொல்லின் பொருத்தப்பாடிற்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. (கணிதத்தில் ஒரே தேற்றத்தை பல்வேறு முறையில் நிறுவலாம்)

மணி மணிவண்ணன் நீங்கள் முன்னரே குறிப்பிட்டது போல கணிதம் ஒரு விதமான தர்க்கம் அல்லது ஏரண அளவையியல். “முரண்படாத (consistant) என்கிற பொருளில் முழுமையானது என்கிறேன். எந்த ஒரு மொழிதலும் பல வாசிப்புகளுக்கான சாத்தியத்தை கொண்டிருக்கும்; அதில் ஒன்றுக்கு ஒன்று முரண்படலாம். அவ்வாறு பல வாசிப்புகள் சாத்தியமற்ற, ஒற்றை வாசிப்பை மட்டுமே கொண்ட மொழிதலுக்கான எந்த சட்டகத்தையும் கணிதம் எனலாம் என்கிறேன்.”

கணினியில் நிரல் எழுதுவது ஒரு கலை. மற்றவர்களுக்குப் புரியும் வகையில் எழுதுவது ஒரு வகை. அதனால் எளிதில் அதை நீட்டிக்கலாம். புரியாத வகையில் எழுதுவதும் ஒரு திறமை. கணினிக்கலை (ஆர்ட் அவ் கம்ப்யூட்டிங்) துறையில் ஆழ்ந்தவர்களுக்கு மட்டுமே எளிதில் வரும். கணித விடைகளை வெவ்வேறு விதங்களில் எழுதுவது பற்றியோ, புரிந்து கொள்வது பற்றியோ அக்கறை கொள்வதில்லை. எழுதிய நிரல்களை மீளாய்வு செய்து அவற்றை மெருகேற்றுவது கணினித்துறையில் இயல்பு. அதன் நோக்கம் முடிவுகளை மாற்றுவதல்ல. நிரலை எளிமையாக்குதல், நிரலை நீட்டித்தல், நிரலைத் திருத்த வகை செய்தல் போன்று - கட்டுரைகள், கதைகள், கவிதைகளில் திருத்தம் செய்வது போன்ற திருத்தங்களைக் கொண்டு சேர்ப்பது. கணிதத் தேற்ற முடிவுகளில் இவ்வளவு ஆழமாகக் கலையுணர்வைக் கொண்டுவருவதாகத் தெரியவில்லை. அப்படிச் செய்வதை நேரத்தை வீணடிப்பதாகவும் கருதலாம். கணித்துறையில் அப்படியல்ல

Roza Vasanth ஸாரி, கணிதத்தைத்தான் கலை என்று சொல்லலாம், நிரல் எழுதுவது கலையல்ல என்று வாதிடவே அதிக காரணங்கள் உள்ளன. ;' வருகிறேன்.

மணி மணிவண்ணன் எண்ணர் eṇṇar : (page 518)

எதிர் பார்க்கை. (W.) 7. Mathematics; கணிதம். (சூடா.)

எண்ணர் eṇṇar

, n. < id. 1. Mathematicians, astronomers; கணிதர். 2. Logicians; தார்க்கிகர். ஏரணங் காணென்ப ரெண்ணர். (திருக்கோ. நூற்சிறப்பு; சங். அக.) 3. King's ministers, counsellors; மந்திரிகள். (பிங்.)

சென்னைப் பல்கலைப் பேரகராதியில் இருந்து.

மணி மணிவண்ணன் எண்ணூல் eṇṇūl : (page 519)

, n. < id. +. Confirming, establishing; உறுதிப்படுத்துகை. (சங். அக.)
எண்ணூல் eṇṇūl

, n. < id. +. Mathematics; கணிதநூல். பன்னுமெண்ணூன் முக்கந்தம் பலவு முறையி னோதினனால் (காஞ்சிப்பு. சனற்கு. 40)

மணி மணிவண்ணன் கணிகன் kaṇikaṉ

, n. < gaṇi. Astrologer; சோதிடன். கணிகரிம் மைந்தன் வைகிற் காவல னிறக்கு மென்ன (காசிக. வீரேசன். 11).

கணிகை kaṇikai

, n. < gaṇikā. 1. Harlot, courtesan, prostitute; பொதுமகள். கணிகை யொ ருத்தி கைத்தூணல்க (மணி. 16, 6). 2. Eared jasmine. See முல்லை. கணிகைதுன் றளப்பில் கோங்கு (இரகு. இந்தும. 14)

மணி மணிவண்ணன் கணிதன் kaṇitaṉ : (page 705)

kaṇita-rattiṉam

, n. < id. +. Name of a mathematical work in Tamil; ஒரு தமிழ்க் கணிதநூல். (கணக்கதி

. பாயி.)
கணிதன் kaṇitaṉ

, n. < id. 1. Astronomer, astrologer; சோதிடன். கணிதர்சொற்ற வோரையில் (நைடத. அரசர. 9). 2. Arithmetician, mathematician; கணக்கறிவோன்.

மணி மணிவண்ணன் கணிவன் kaṇivaṉ

, n. < gaṇi. Astrologer; சோதிடன். தொல்கேள்விக் கணிவன் (பு. வெ. 8, கொளு, 20)

Roza Vasanth தகவல்களுக்கு நன்றி; எண்ணர் என்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல. கணிதர் என்பது நீங்கள் எடுத்துக்காட்டியுள்ளதிலும் astronometr astrologer என்று வருகிறது. நம்ம ஊரில் உள்ள இந்த குழப்பத்தில் இருந்து விடுபட வேண்டியுள்ளது. வெளியே போகிறேன். இரவு வந்து மற்றதை பார்க்கிறேன்.

Cheenu Narasimhan  கணி என்ற வேர்ச்சொல்லின் பொருள் என்ன?

 it computing or inferring?

Actually speaking kaNi (or gaNith in Sanskrit??) should be equivalent of mathematics. But can we use kaNi for computing? Actually computing should be a subset of what is being practised as part of mathematics. So using kaNi in place of computing is in one way restricting the meaning of kaNi. I think kaNigNar is more an apt term for a mathematician than for a computer engineer.

Actually computer engineer is too broad a term. It can mean anything. I haven't seen this being used in the industry either. It is a commoner's usage. It ideally should refer a person who develops computers. We use it to refer anyone who works with computer right from programmer to a hardware or chip designer. We should have terms differentiating these than have a broad term like kaNigNar.

My 2 cents (or paise?) smile emoticon

மணி மணிவண்ணன் Mathematics is an ancient science. Tamil already has a name for both the science and its practitioners. Computer and its engineers are very new and that is why we have coined words to represent them. I don't mind if mathematicians want to be recognized as computer engineers. But it is amusing to see an ancient profession aspiring to a modern word coined for a very young profession.


Cheenu Narasimhan · 2 பொதுவான நண்பர்கள்1. கணினி துறையில் வேலை செய்பவர்கள் எல்லோரும் அடிப்படை கணிதத்திலா வேலை செய்கிறார்கள்? அடிப்படை கம்ப்யூடிங் தவிர கணிதம் எங்கே இருக்கிறது? கணிதம் சம்பந்தப்பட்ட புரோக்ராமிங் செய்பவர்களும் கணினிகளை அவர்கள் தங்கள் கால்குலேஷணுக்காக் உபயோகப்படுத்துகிறார்கள். அவ்வளவே.

2. கம்ப்யூடிங் என்பது கணிதத்தின் ஒரு பகுதியே. அப்படி இருக்கையில், கம்ப்யூடிங் என்பதனைக் குறிப்பிட கணி என்ற கணிதத்தைக் குறிக்கும் வேர்ச்சொல்லை ஏன் உபயோகிக்கவேண்டும்?

3. கம்ப்யூட்டர் எஞ்சினியர் என்பது ஒரு பொதுவான பயன்பாடு. அதற்கு ஏன் ஒரு கலைச்சொல் வேண்டும். கணினி பொறியாளர் என்றே சொல்லலாம். மற்றபடி, புரோக்ராமர் போன்ற குறிப்பிட்டுச் சொல்லும்படியான சொற்களுக்கு வேறு பொருத்தமான கலைச்சொற்களை உருவாக்கலாமே?

மணி மணிவண்ணன் So, are mathematicians so starved of creativity that they have to steal a word coined to represent another field? Remember, these words were coined almost two decades ago. How long have mathematicians been around?

Cheenu Narasimhan · 2 பொதுவான நண்பர்கள்So, is the issue about mathematicians trying to snatch a word that has been in vogue for just two decades? If there is an argument that kaNi represents more mathematics than computing why not revisit that usage? It's just couple of decades old. smile emoticon

மணி மணிவண்ணன் But there are words to represent mathematicians that are more than 1000 years old. Why is there an aversion?

Cheenu Narasimhan · 2 பொதுவான நண்பர்கள்I don't think there is an aversion. It's more about trying to come up with something that is more appropriate for terms related to computing. That's all

மணி மணிவண்ணன் But as I have shown from Tamil lexicon, kaNithar is the word used to refer to both mathematicians and astrologers (because they used mathematics to do their computation). If there is no aversion, why try to coin a new word for an ancient profession?

மணி மணிவண்ணன் And of course, eNNar is also an alternate word used to refer to mathematicians. Why is that not appropriate?

Cheenu Narasimhan · 2 பொதுவான நண்பர்கள்I don't think eNNar is inappropriate. IMHO it vibes more with arithmetician

மணி மணிவண்ணன் ஆனால், அதுதான் மரபுவழி வந்த சொல். சீனிவாச ராமானுஜனும் எண் கணிதத்தினால்தான் இன்றும் பாராட்டப்படுகிறார். அது பொருத்தமற்றது என்றால் கணிதம் என்ற துறை அதன் ஆயிரக்கணக்கான வரலாறைப் புறக்கணிக்கிறது என்றல்லவா சொல்ல வேண்டும்? கணி என்ற சொல் வடமொழி வேரிலிருந்து வந்தது. எண் என்ற சொல் தமிழ் வேரில் பிறந்தது. ஆனால், நம் முன்னோர்கள் எண்ணர்கள் என்ற சொல்லை கணிதவல்லுநர்களுக்கும் புழங்கியிருக்கிறார்கள். பழமையான மரபுள்ள சொல்லைத் தவிர்க்க ஒரே காரணம் அதே சொல் கோள்களின் இடத்தைக் கணித்து ஆரூடம் சொல்பவர்களுக்கும் புழங்குவதால் மட்டுமே என்பது தெளிவு.

Arul Selvan தொடர்ச்சிக்காக... எனக்கென்னமோ கணிதர்/கணிதன் என்பதே கணிதவியலின் அனைத்துத் துறைகளையும் அடக்க பொதுவானதாக, விரிவானதாக, போதுமானதாக இருக்கிறது.
நிரல் எழுதுபவர்கள் நிரலாளர் (ப்ரொக்ராமர்ஸ்), கணினி அறிவியலாளர் (கம்யூடர் சயன்டிஸ்ட்ஸ் ) கணிஞர், கணிப்பொறியாளர் (கம்யூட்டர் எஞ்சினீயர்ஸ்) என்பதெல்லாம் கணி (கம்ப்யூட்) என்பதிலிருந்து இயல்பாக பயின்றுவருகிறது . இந்தப் பயன்பாடும் வழக்கில் பயின்று வருவதால் இதுவே பழக்கப் படுத்திக்கொள்ளவும் எளிது
இதில் எண் , கணி என்பன தமிழில் கணிதக் கருத்துகளை முதலிலிருந்தே குறித்தும் வேர்ச்சொற்களாகவும் உள்ளன. அதனால் கணிதவியல்(மாதமாடிக்ஸ்) என்னும் பரந்த, எண்/கணி சாராத ஆனால் அளத்தல் உள்ளடங்கிய தற்கால( டோபாலஜி,லாஜிக், அனாலிஸிஸ்,ஜியோமெட்ரி போன்று ) விரிவையும் உள்ளடாக்கிய ஒரு சொல் வேண்டும். அதை கணியிலிருந்தோ எண் என்பதிலிருந்தோ அவற்றினும் விரிந்த அளவை எனும் சொல்லிலிருந்தோதான் வருவிக்க வேண்டும். வேர்ச்சொற்கள் மூன்று - கணி, எண், அளவை. இவற்றில் எனக்கு கணிதர்/ன் என்பது பயில்வோற்கும் கணிதம்துறைக்கும் பொருத்தமானதாக உள்ளது. மற்றவர்கள் தம் கருத்துகளைக் கூறுங்கள்

மணி மணிவண்ணன் கணிதர், கணியர் என்ற சொற்கள் ஏன் தீண்டத்தகாதவை? அவை ஆரூடக்காரர்களையும் குறிப்பிடுவதாலா? அவர்களிடமும் கணி என்ற சொல்லைப்பற்றிச் சண்டை போடலாமா?

Arul Selvan எனக்கென்னமோ கணிதர்/கணிதன் என்பதே கணிதவியலின் அனைத்துத் துரைகளையும் அடக்க பொதுவானதாக, விரிவானதாக, போதுமானதாக இருக்கிறது.

Arul Selvan நிரல் எழுதுபவர்கள் நிரலாளர் (ப்ரொக்ராமர்ஸ்), கணினி அறிவியலாளர் (கம்யூடர் சயன்டிஸ்ட்ஸ் ) கணிஞர், கணிப்பொறியாளர் (கம்யூட்டர் எஞ்சினீயர்ஸ்) என்பதெல்லாம் கணி (கம்ப்யூட்) என்பதிலிருந்து இயல்பாக பயின்றுவருகிறது . இந்தப் பயன்பாடும் வழக்கில் பயின்று வருவதால் இதுவே பழக்கப் படுத்திக்கொள்ளவும் எளிது

Arul Selvan இதில் எண் , கணி என்பன தமிழில் கணிதக் கருத்துகளை முதலிலிருந்தே குறித்தும் வேர்ச்சொற்களாகவும் உள்ளன. அதனால் கணிதவியல்(மாதமாடிக்ஸ்) என்னும் பரந்த, எண்/கணி சாராத ஆனால் அளத்தல் உள்ளடங்கிய தற்கால( டோபாலஜி,லாஜிக், அனாலிஸிஸ்,ஜியோமெட்ரி போன்று ) விரிவையும் உள்ளடாக்கிய ஒரு சொல் வேண்டும். அதை கணியிலிருந்தோ எண் என்பதிலிருந்தோ அவற்றினும் விரிந்த அளவை எனும் சொல்லிலிருந்தோதான் வருவிக்க வேண்டும். வேர்ச்சொற்கள் மூன்று - கணி, எண், அளவை. இவற்றில் எனக்கு கணிதர்/ன் என்பது பயில்வோற்கும் கணிதம்துறைக்கும் பொருத்தமானதாக உள்ளது. மற்றவர்கள் தம் கருத்துகளைக் கூறுங்கள்


No comments:

Post a Comment