Monday, December 14, 2015

1, டிசம்பர்

இளையராஜா எதிரே தோன்றினால் தவிர, வேறு எதற்காகவும் எழுந்து நிற்பதை என்னை நானே அவமதித்துக் கொள்வதாக நினைக்கிறேன். ஒரு காலத்தில் பல அரசியல் காரணங்களால் இந்திய வெறுப்பு இருந்தது உண்மை; இப்போது தமிழகத்தை போல, சில நேரங்களில் அதிகமாகவே, புழங்க நேர்ந்த எல்லா இந்தியாவையும் நேசிக்கிறேன்; இந்தி ஆதிக்கம் தொடங்கி பலவற்றை எதிர்த்தாலும், இந்திய கூட்டமைப்புக்கு ஊறு விளைவிக்கும் எந்த முன்னெடுப்புக்கும் எனது ஆதரவு இல்லை. இதை தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்கும் நிறுவனப்படுத்தப்பட்ட செயல்மூலம் நிருபிக்க நிர்பந்திப்பது சகிப்பின்மைதான் என்று தேசியவியாதிகளுக்கு விளக்க முடியாது.
சென்னை தியேட்டர்களில் தேசிய கீதம் இசைக்கும் போது நான் மட்டும் தனியே அமர்ந்திருந்திருப்பதை வினோதமாக பார்த்தாலும் விரோதமாக யாரும் பார்த்த நினைவு இல்லை. (இப்போது தேசிய கீதம் போடுவதில்லை என்று நினைக்கிறேன்; எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம்.) ஒரு காலத்தில் மிகவும் வெறுத்த, இப்பொழுதும் வெறுக்கும், சென்னை நடுத்தரவாசிகளின் ஹிபாக்ரசிக்கு பயந்து, வேறு ஒரு இந்திய நகரில் நிலைகொள்ளாதது இப்போதைக்கு நிம்மதியாக உள்ளது.

No comments:

Post a Comment