மிகை உணர்ச்சி பொய்க்கோபம் எல்லாம் காட்டும் ஒரு டீவி நிகழ்ச்சியினிடையில், மனுஷ்யபுத்திரன் கிட்ட 'ராயல்டி பத்தி என்ன நினைக்கறீங்க?" என்று கேட்டால் கோபப்படாமல் நிதானமாக பதில் சொல்வார். அந்த பக்குவம் நேர்மையா இருக்கறவங்களுக்கு வராது!
**** ******* ********
ஜனநாயகத்தில் பொய் சொல்வதற்கும் ஒருவருக்கு உரிமை உண்டு; பொய்யை பிரசாரம் செய்வதையும் தடை செய்ய முடியாது. அந்த பொய்யை எதிர்கொண்டு, அதை பொய் என்று நிறுவுவதும் மட்டுமே, அதை பொய் என்று கருதுபவர்களுக்கான ஜனநாயக வாய்ப்பு. ஆனால் விமர்சனமும் தர்க்கமும் கறாராக கொண்டிராத பொதுப்புத்தியில், பொய்ப்பிரச்சாரம் ஏற்படுத்தும் பாதிப்பே அதிகமாக இருக்கும். அதனால் நாம் பொய்மை என கருதுவதை விவாதித்து, அதை நாமே அங்கீகரிக்காதிருப்பதே பல நேரங்களில் புத்திசாலித்தனம் என்று தோன்றுகிறது; அதே நேரம் ஏற்கனவே சமூக அங்கீகாரம் பெற்றுவிட்ட பொய்யை எதிர்கொள்வதும் அறிவுரீதியான கடமையாகிறது. நிஜத்தை நேர்மையாக எதிர்கொண்டால் போதும்; பொய்யை எதிர்கொள்ள புத்திசாலித்தனமான அணுகுமுறை தேவைப்படுகிறது.
**** ******* ********
தனக்கு ஞானம் இருப்பதாக, தானே ஒரு பெயர் சூடி கற்பித்துக் கொண்ட மண்ணாந்தை, எத்தனை முறை வாய்ப்பு கிடைத்தாலும் அறிவோடு பேசும் சாத்தியம் இல்லை என்று தெரியும்; ஆனால் இந்த முறையாவது நேர்மையோடு பேசுமா என்று இப்போதுதான் எட்டிப் பார்த்தேன். ம்ஹும் சான்சே இல்லை!

No comments:
Post a Comment