Wednesday, May 1, 2013

தந்திர அரசியல் நேர்மை.


2004-2006இல் குழலி நேரடியான சாதி சார்புடன், ஆனால்  பூடகமாக வன்னிய ஜாதிவெறி தீவிரத்திற்கு ஆதரவாக எழுதிக்கொண்டிருந்தபோது, அதை எதிர்த்து நான் எழுதியதை  நண்பர்கள் பலர் எதிர்த்தார்கள்; மாறுபட்டார்கள்; சிலர் மென்மையாக கண்டிக்க கூட செய்தார்கள்.  தங்கமணி நீண்ட விளக்கம் எனக்கு எழுதினார். அதற்கு 'வாவ்..' என்று பாராட்டுக்கள். சங்கரபாண்டி கண்டனமே செய்தார். 

இப்போது குழலி நேரடியாக மிக வெளிப்படையாக ஜாதிவெறி நிலைபாடு எடுத்திருக்கும்போது இவர்கள் யாராவது தங்களது அன்றய நிலைபாட்டுக்கு வருத்தம் தெரிவிப்பார்கள், குறைந்த பட்சம் குழலியின் இப்போதய ஜாதிவெறி நிலைபாட்டை கண்டிப்பார்கள், சின்ன எதிர்ப்பு குரலாவது ஒலிப்பார்கள்  என்று பார்த்தால் .. வாயையே திறக்கவில்லை. (என் கணிப்பு முழு மெய்யாவதில் எனக்கு எந்த பெருமையும் இல்லை; ஆற்றைமையான கோபம் மட்டுமே). ஏதோ ஜாதிவெறி பதிவுகளை பார்க்காமல் வேறு வேலையில் இருக்கிறார்களோ என்றும் கொள்ள முடியாது. அவரோ மானாங்கண்ணியாய் பதிவு போடுகிறார். இவர்கள்  கண்டும் காணாமல் வேறு ஏதோ பேசுகிறார்கள். எல்லாம் வேறெங்கோ அல்ல, அருகருகில் ஃபேஸ்புக்கில். இதற்கு நடுவில் சுந்தரமூர்த்தி முனிரத்தினம் குழலியின் பதிவுகள் இரண்டை லைக் வேறு செய்கிறார். நான் நிலமை இவ்வளவு கேவலமாகும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த சூழலில் புழங்குவதை விட, காலக்கொடுமையை இங்கே பதிவு செய்துவிட்டு,  கிரீயேடிவாக நான்  செய்ய காத்திருக்கும் வேலைகளை முழுகவனத்துடன்  தொடர்வது மட்டுமே எனக்கிருக்கும் வழியும் வெளியும்.

14 comments:

  1. மரக்காணம் நிகழ்விற்கும் முழு பொறுப்பு ராமதாஸ் தொடங்கி வழி நடத்திச் செல்லும் ஜாதிவெறி அரசியல் மட்டுமே. அதில் அவர் பக்கம் நியாயம் இருக்குமா என்று கேட்பது அபத்தமானது. திருமாவோ வேறு யாரோ பாமகவிற்கு எதிர்வினையாக கூட ஜாதிவெறியாக பேசி இன்னமும் எதுவும் பதிவாகவில்லை. கேள்விப்படும் செய்திகளும் பிரச்சனைகளை பாமக தொடங்கியதாகவே நம்ப வைக்கிறது. ஜாதிவெறி அரசியலை எந்த வெட்கமும் இன்றி கைகொண்டவர்களை தவுர வேறு யாரும் அவர்கள் சொல்லும் செய்திக்கு ஆதாரமாக எதையும் சொல்லவில்லை. இழப்பு இருப்பதால் மட்டும் ஒரு பக்கம் நியாயம் வந்துவிடாது. ஆகையால் இரண்டு இளம் உயிர்கள் போனதற்கும் ராமதாசையே கண்டிக்க வேண்டும். நியாயமாக வன்னியர்களும் இரு உயிரபலிக்கு காராணம் என்று அவர் மீதுதான் கோபம் வரவேண்டும். இன்னமும் அவர் பின்னால் இன்னும் உறுதியாக போகவேண்டும் என்று சொல்லும் வன்னியர்கள் மற்ற சமூகத்திற்கு மட்டுமின்றி தங்களுக்கும் நாசத்தையே கொண்டு வருவார்கள்.

    ReplyDelete
  2. ஃபேஸ்புக்கில் சங்கரபாண்டி எழுதிய கீழ்காணும் பதிவிற்கான பின்னூட்டம் மேலே.

    /சமநிலையற்ற சாதியடுக்கில் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குத் துணையாக இருந்து அவர்களுக்கு சமூகநீதியைப் பெற்றுத்தந்து பின் அவர்களையும் அணைத்துக்கொண்டு சாதிக்கெதிரான நிலை, சாதியைக் கடந்த நிலை, சாதியற்ற நிலையை அடைதலே சாதிய ஒடுக்குமுறைக்கெதிரான நிலை! மருத்துவர் இராமதாசும், பாமகவினரும் அத்தகையப் புரிதலுடன்தான் செயல்பட்டு வந்தார்களென்று நினைத்தேன். அந்த அடிப்படையில் திருமா-இராமதாசு கைகோத்து தலித்-வன்னியர் நல்லிணக்கத்துக்காகச் செயல்பட்டனர் என்றே நினைத்து எப்பொழுதுமே வக்காலத்தும் வாங்கினேன்.

    இப்பொழுதும் கூட சாதிகளை ஒழிக்க முடியாது, கருணாநிதி, வீரமணி போன்றவர்கள் ஏமாற்றுகிறார்கள், அதனால் அனைத்து சாதிகளும் இணைந்து செயல்படப்போகிறோம் என்று தலித்துகளையும் உள்ளடக்கிய ஒரு புதிய அணியை உருவாக்க மருத்துவர் இராமதாசு முற்பட்டிருந்தால், திராவிட அரசியலை வைத்து குடும்பக்கொள்ளையடித்து வரும் கருணாநிதி கூட்டத்துக்கு எதிர் அரசியல் என்று அதைப் புரிந்து கொண்டிருப்பேன்.

    ஆனால் சிறிது கூட மனிதத்தன்மையற்று தலித்துகளை மட்டும் பிரித்து மற்ற சாதியினர் அனைவரையும் அவர்களுக்கு எதிராகத் திரட்டுவதைப் போன்ற ஈனச்செயலைச் செய்து வருகிறார் மருத்துவர். இப்பொழுது ஏற்பட்டிருக்கும் மொத்தப் பிரச்னைக்கும் ஆரம்பம் யார்? மரக்காணம் நிகழ்வில் அவர் பக்கத்தில் நியாயம் இருக்கிறதோ இல்லையோ, ஆரம்பித்துவைத்த அவருக்கு ஆதரவாக யார் இருக்க முடியும்? இன்னும் அரசியல்அறிந்தவர்கள் அவர் பக்கம் நிற்பதற்குக் காரணம் சாதிப்பற்றே அன்றி வேறேதுமில்லை. சாதிப்பற்றுக்கும் சாதிய ஒடுக்குமுறைக்கும் இடைவெளி என்பது வெறும் கோடுதான்./

    ReplyDelete
  3. வசந்த்:
    நான் ஃபேஸ் புக்கிலோ அல்லது வலைப்பதிவிலோ ஈடுபாட்டுடன் இல்லை. எதையும் வாசிக்கவில்லை. பறவைகள், காட்டுயிர், சுற்றுச்சூழல் இவைகளைத் தாண்டி அரசியல் பூர்வமான எதையும் நான் செய்யவில்லை. பெரிய காரணமில்லை. ஈழ இனப்படுகொலைக்குப் பிறகு நான் எதையும் எழுதவுமில்லை. அதற்கான மனநிலை எனக்கு இல்லை. தமிழக அரசியல் தலைவர்களின் மேல் எந்தவிதமான நம்பிக்கையும் எனக்கு இல்லை. அவர்களை திட்டவோ, விமர்சிக்கவோ கூட எனக்கு விருப்பமில்லை. நான் சில விசயங்களில் (தமிழகம் தொடர்பான) உறுதியாக இருக்கிறேன்: அணுசக்தியை எதிர்க்கிறேன். கூடங்குளம் அணு உலையை எதிர்க்கிறேன். தமிழ் இனப்படுகொலை, மீனவர் படுகொலை தொடர்பான எல்லா கட்சி சார்பற்ற அமைதியான போராட்டங்களையும் நான் ஆதரிக்கிறேன். இனப்படுகொலைக்கு பிறகு நான் காந்தியத்தின் பக்கம் இருந்து சில விசயங்களைப் புரிந்துகொள்ளப் பார்க்கிறேன். அதனால் காந்தியை மறுபடியும் வாசிக்க ஆரம்பித்து இருக்கிறேன்.

    குழலி என்ன எழுதுகிறார் என்பதையும் நான் அறியேன். செய்தித் தாள்கள் வழி அறிந்தவரையில் இராமதாசின் சமீபத்திய அரசியல் செயல்பாடுகள் கேவலமானவை; மக்கள் விரோதமானவை; பதவி வெறி, விரக்தி இவைகளின் வழி அவர் வந்து சேர்திருக்கும் இடம் இது.

    உங்கள் பதிவு ரீடரில் இருப்பதால் வாசித்தேன். என் பெயரைக் குறிப்பிட்டிருந்ததாலும், இதைப்பற்றிய எனது நிலைப்பாட்டைச் சொல்ல விரும்பியதாலும் இதை எழுதுகிறேன்.

    ReplyDelete
  4. தங்கமணி உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

    2009 ஈழத்திற்கு பிறகான உங்கள் நிலமை எனக்கு புரிகிறது. உங்களை வம்படியாக குற்றம் சொல்ல இங்கே உங்கள் பெயரை இழுக்கவில்லை. குழலி பற்றிய என் விமர்சனத்திற்கு பதிலாக முன்பொருமுறை என் பதிவில் நிண்ட விளக்கம் ஒன்றை நீங்கள் எழுதினீர்கள்; சிலர் அதை பாராட்டவும் செய்தார்கள். அதற்கு பதில் எழுத நினைத்து பின்னர் எழுதாமல் விட்டேன். நீங்கள் மட்டுமல்லாது பலரின் அன்றய பார்வைகள் எவ்வளவு தவறானவை என்று இன்றாவது உணரவேண்டும் என்பதுதான் எனது நோக்கம். இது மேலே நான் குறிப்பிடாத பலருக்கும் பொருந்தும். (நிறப்பிரிகையே தொடக்கத்தில் பாமகவை ஆதரித்தது. நானும் அத்தகைய தவறான நிலைபாடுகளை எடுத்துள்ளேன்.) நீங்கள் பாமகவின் ஜாதி வெறி மட்டுமின்றி, ஒட்டு மொத்த சமூக வெறியையும் கண்டிப்பீர்கள் என்பதுதான் என் நினைப்பும்.

    இன்று காந்தியை நீங்கள் வாசிக்க தொடங்கியிருப்பதை வரவேற்கிறேன். காந்தியை மறுவாசிப்பதே இன்றய முக்கிய தேவை என்று நானும் நினைக்கிறேன்

    ReplyDelete
  5. / பாமகவின் ஜாதி வெறி மட்டுமின்றி, ஒட்டு மொத்த சமூக வெறியையும் கண்டிப்பீர்கள்../ 'ஒட்டுமொத்த சமூக விரோத போக்கையும்..' என்று இருக்க வேண்டும்.

    ReplyDelete
  6. நல்லது. குழலியின் அரசியலில் இருந்து தங்களை பிரி்த்து பார்க்க பலரும் முன்வரும் போக்கைத்தான் சொல்கிறேன்.

    ஈழ இனப்படுகொலையை வெறும் கருணாநிதியின் துரோகம் மட்டுமே காரணம் என்பதாக அரசியல் புரிதலோடுதான் அவர் உள்ளார். அவ்வளவுதான் அவர் முற்போக்கு. ஒரு பெரும் போராட்டத்தின் தோல்விக்கு அவர் போன்றவர்கள் வைத்துள்ள ஒற்றை தீர்வும் வந்தடைந்த காரணமும் இவர்கள் போன்றவர்களை புரிய வைக்கிறது.

    இப்போதும் அவர் செய்யும் அரசியல் என்பது கருணாநிதி மீது கோபமாக இருக்கும் தமிழார்வலார்கள் மற்றும் அதிமுக காரர்களை திரட்டி அதன் வழியாக ராமதாசை புரஜக்ட் செய்வது என்பதுதான்.

    அதுவும் கடந்த சில பதிவுகளில் (பேஸ்புக்) வெட்டு குத்து என்று அவர் எழுதுவது அப்படியே மருத்துவர் அய்யா பேசுவதை போலவே உள்ளது.

    உடனே திமுக,உடன்பிறப்பு என்றெல்லாம் எழுதி(திட்டி) திசை திருப்பி இங்கே என்ன சொல்கிறார்கள் என்றே பார்க்காமல் எதையாவது எழுதுவார் என்று தெரிந்தே இதை எழுதுகிறேன்.

    திமுகவை இன்னமும் அதிமுகவை விட காப்பாற்ற கூடிய வேண்டிய இயக்கமாக மக்கள் பார்ப்பதற்கு உண்டான காரணம் நிறைய. ஆனால் ஸ்டாலின் அந்த எதிர்ப்பார்ப்பை எந்த அளவிலும் நிறைவேற்ற மாட்டார் என்ற நிலை இருந்தாலும் இதுதான் இன்றைய எதிர்ப்பார்ப்பு.

    தந்திர சாதி அரசியல் ஒரு பொது எதிரியை ( கருணாநிதியை) எதிர்த்து அதன்முலம் மக்களை திரட்டி அதைவிட கேவலமான ஒரு எதிரியை (மருத்துவர்) எதிர்க்கிறது.

    ஐம்பது வருட அரசியலில் திமுகவும் கருணாநிதியும் சமபாதித்ததில் எத்தனை சதவீதித்தை வெறும் இருபது வருட அரசியலில் ராமதாஸ் குடும்பம் சம்பாதித்தது என்பதைப்பற்றி கணக்கு எடுக்காமல் சந்தன வீரப்பனை ஆதரித்து காமெடி செய்கிறார்.

    அதனால் தான் உண்மைத்தமிழன் அண்ணன் கூட ஆதரவு தெரிவிக்காமல் தெரித்து ஓடுகிறார் போல..

    மருத்துவர் அய்யாவையும் குரு அய்யாவையும் உள்ளே வைத்து அம்மா வைத்தியம் செய்தும் ஜெயலலிதாவை விமர்சிக்காமல இருப்பதில் இருக்கிறது அவர் புத்திசாலித்தனம்.

    கடைசி கடைசியில் பொங்கலூர் கவுண்டரை ஷேர் செய்கிறார். அதற்கு வருத்தம் வேறு படுகிறார்...ஏன் வருத்தப்படவேண்டும்....அவரை விட பலமடங்கு கீழே இறங்கியாச்சே....





    ReplyDelete
  7. ஈழ பிரச்சினையையும் கருணாநிதியையும் பேசாமல் இதைப்பற்றி எதையாவது எழுதட்டும்..

    அதுவரை சங்க ஆட்களின் லைக் மட்டும் பார்த்துகிட்டு இருக்க வேண்டியதுதான்.

    ReplyDelete
  8. //இழப்பு இருப்பதால் மட்டும் ஒரு பக்கம் நியாயம் வந்துவிடாது. ஆகையால் இரண்டு இளம் உயிர்கள் போனதற்கும் ராமதாசையே கண்டிக்க வேண்டும். நியாயமாக வன்னியர்களும் இரு உயிரபலிக்கு காராணம் என்று அவர் மீதுதான் கோபம் வரவேண்டும். இன்னமும் அவர் பின்னால் இன்னும் உறுதியாக போகவேண்டும் என்று சொல்லும் வன்னியர்கள் மற்ற சமூகத்திற்கு மட்டுமின்றி தங்களுக்கும் நாசத்தையே கொண்டு வருவார்கள்.//

    ReplyDelete
  9. //தந்திர சாதி அரசியல் ஒரு பொது எதிரியை ( கருணாநிதியை) எதிர்த்து அதன்முலம் மக்களை திரட்டி அதைவிட கேவலமான ஒரு எதிரியை (மருத்துவர்) எதிர்க்கிறது.//

    தந்திர சாதி அரசியல் ஒரு பொது எதிரியை ( கருணாநிதியை) எதிர்த்து அதன்முலம் மக்களை திரட்டி அதைவிட கேவலமான ஒரு எதிரியை (மருத்துவர்) முன்வைக்கிறது” என்று இருக்க வேண்டும்....

    ReplyDelete
  10. //சங்கரபாண்டி கண்டனமே செய்தார். //

    வசந்த், இது எப்பொழுது எனக்கு நினைவில்லை. நீங்கள் ஆத்திரத்தில் திட்டியிருந்தால் அப்படி வேண்டாமே என்று கேட்டிருக்கலாம். கொஞ்சம் விளக்கமாகச் சொன்னாலோ அல்லது பழைய சுட்டி ஏதாவது கொடுத்தால் நலம். ஒருவேளை நீங்கள் சொல்வது போல் இருந்தாலும் வியப்படைய ஒன்றுமில்லை. பத்து ஆண்டுகளாவது ஆயிருக்குமே, அதற்குள் எத்தனையோ நிகழ்வுகளின் அடிப்படையில் எனக்குள்ளே கூட புதிய தெளிவுகள் ஏற்பட்டிருக்கின்றனவே.

    இன்னும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு SCT-யைப் போய்த் தோண்டினீர்கள் என்றால் (1992-93 காலகட்டத்தில்) பார்ப்பனர்களைப் பற்றிய பெரியாருடைய கருத்துகள் பல ஹிட்லரின் கருத்துகளுக்கு இணையானவை என்று சிலர் சொன்ன கருத்துகளைக்கூடச் சரியென்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன். ஆனால் பின்னால் பல்வேறு அமைப்புகளில் செயல்பெற்ற அனுபவத்தில் தெளிவடைந்திருக்கிறேன்.

    இப்பொழுது மருத்துவர் இராமதாஸ் முற்றிலும் ஒரு சாதிவெறியராகவே இருந்திருக்கிறார் என்ற தெளிவடைந்திருக்கிறேன். திருமா போன்றவர்களே ஏமாந்து விருதுகள் அளித்திருக்கும் போது என்னைப் போன்றவர்கள் எம்மாத்திரம்.

    எனவே இதற்குப் பயந்துபோய் க்ரியேட்டிவாக ஏதும் செய்யப்போய் விடாதீர்கள். போகமாட்டீர்கள்! நாமெல்லாம் அடிக்கடி அப்படி நினைக்கக்கூடும், ஆனால் அதைச் செயலாற்ற முடியாது :-)

    நன்றி - சொ.சங்கரபாண்டி

    ReplyDelete
  11. உங்கள் யாகூக்கு ஒரு மெயில் அனுப்பி உள்ளேன்.

    ReplyDelete
  12. சங்கரபாண்டி,

    குழலி தமிழ்மணத்தில் நடசத்திரமாக இருந்த போது நீங்கள் எழுதிய பின்னூட்டம் ஒன்றைத்தான் குறிப்பிட்டேன். நட்புரீதியாக மென்மையாகதான் கண்டித்தீர்கள். அதற்கு நான் பதில் எதுவும் எழுதவிலலை. அது பெரிய பிரச்சனையும் இல்லை. இப்போது அதை சுட்டிகாட்டி கேள்விகேட்கவவும் எதுவும் இல்லை. அப்படி ஒரு நிலைபாடுக்கான நியாயம் அன்று இருந்ததாகவே எடுத்துக் கொள்கிறேன்.

    என் பிரச்சன இப்போது நேரடியாக ஒரு தீவிர ஜாதிவெறி நிலைபாட்டை குழலி எடுத்துள்ள நிலையில், அதை நீங்கள் தீவிரமாக எதிர்க்க வேண்டும் என்பதுதான் என் எதிர்பார்ப்பு. குறிப்பாக அன்று அவரை ஆதரித்ததனால் அதற்கான பொறுப்பும் உங்களுக்கு உள்ளது என்பதைத்தான் சுட்டுகிறேன்.

    இன்று ராமதாஸ் செய்துள்ளது போல் ஒரு மோசமான வேலையை இத்தனை தீவிரமாக யாரும் செய்ததில்லை. பொதுவாகவே தலித்துக்கு எதிரான பொதுப்புத்தி சமூகத்தில் உண்டு எனினும், அமைப்புரீதியாக எல்லா ஆதிக்க சாதிகளையும் ஒன்று சேர்த்து, காலம் காலமாக வஞ்சித்த தலித்தை எல்லோருக்கும் எதிரியாக்குவது போன்ற அயோக்கியத்தனம் வேறு உண்டா. அதற்கு என்னவெல்லாமோ தவறான தகவல்கள் திரித்தல்கள் மூலம் ஒரு யதார்த்தத்தை கற்பிக்கும் போது, அதற்கு சின்ன நியாயம் கூட வந்துவிடாமல் பார்ப்பதுதான் சாதி எதிர்ப்பு அரசியலாக இருக்க முடியும்.

    நான் ஃபேஸ்புக் ட்விட்டர் எல்லாவற்றையும் விட்டு வேலையை மட்டும் பார்ப்பதாகத்தான் இருந்தேன். மாணவர் போராட்டம் என்னை ஃபேஸ்புக்கை கவனிக்க வைத்தது. இப்போது இந்த பிரச்சனையை தொடர்ந்து இரண்டு நாட்களாக கவனித்த பின்னர் ஆற்றாமையால் இந்த பதிவை எழுதினேன். இன்னமும் கூட பலர் தேவையான தீவிரத்துடன் பாமகவிற்கு எதிர்ப்பு குரல் எழுப்பவில்லை என்றுதான் கருதுகிறேன்.

    ReplyDelete
  13. ஃபேஸ்புக்கில் Thiru Yo பதிவில் இட்ட பின்னூட்டம்.

    விடுதலை சிறுத்தைகளோ அல்லது வேறு குழுவினரோ ஜாதிவெறியை தூண்டி விட்டு, குறை ந்தது ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக கூட, ஒரு தனிப்பட்ட சம்பவமாக மரக்காணம் கொலைகள் நடந்ததாக தெரிய வந்தால் நிச்சயம் அவர்களை கண்டிக்கலாம். பாமகவினர் செய்த ரகளையும் பொதுமக்களுக்கு விளைவித்த தொல்லைகளும் சேதமும் பொதுமக்கள் வாக்குமூலமாக பல இடங்களில் பதிவாகி இருக்கிறது. இஸ்லாமியர்கள் உட்பட பல தரப்பினர் அதை சாட்சியாக சொல்லியிருக்கிறார்கள். மரக்காணத்தில் தலித்கள் தாக்கப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். ஒருவர் மரணமடைந்துள்ளார். எல்லாவற்றையும் பாமக தொடங்கியதாக பலதரப்பிலும் சொல்கிறார்கள். குழலி நம்பும் (அவரையும் சேர்த்த) ஒரு வன்னிய ஜாதி வெறி தரப்பை தவிர யாரும் மரக்காணம் கொலைகளை சிறுத்தைகள் திட்டமிட்டு செய்ததாக யாரும் சொல்லவில்லை. அதற்கான தூண்டுதலாக எந்த பேச்சையும் அவர்கள் முன்வைக்கவில்லை; பேசி பதிவாகவில்லை. மாறாக பாமக முழுக்க முழுக்க வெறுப்பு பிரச்சாரத்தையும் ஜாதிய துவேஷத்தையும் செய்திருக்கிறது. ஒரு சிறு தலித் மக்களுக்கு எதிராக எல்லா ஆதிக்க ஜாதிகளையும் வெறியூட்டி கூட்டியிருக்கிறது. வன்முறையில் ஈடுபடுவோம் என்று பகிரங்கமாக கூவியிருக்கிறது. வன்முறையில் இறங்கியிருக்கிறது. ஆகையால் முழுக்க அந்த இரண்டு பேர் கொலைக்கு தூண்டுதலாகவும், கருவியாகவும் பாமகவின் ஜாதிவெறியே இருந்திருக்கிறது. அந்த இளைஞர்களின் அநியாய சாவிற்கு அவர்களே அடிப்படை காரணம். இதற்கு ராமதாசைத்தான் கண்டிக்க வேண்டும். அதை கண்டிக்காதவர்கள்தான், இன்னமும் காடுவெட்டி குரு பின்னால் போகவேண்டும் என்பவர்கள்தான் வன்னிய மக்களுக்கு உண்மையான எதிரிகள். அந்த இளைஞர்களின் சாவிற்கு மனம் கொதிப்பவர்கள் இவர்களைத்தான் கண்டிக்க வேண்டும்.

    மற்றபடி கொலையில் ஈடுபட்டவ்ர்கள் (அதே போல் மற்ற குடிசை எரித்தவ்ர்கள், தாக்குதலில் ஈடுபட்டவர்களுடன், ஒரு தலித் மரணத்திற்கு காரணமானவர்களுடன்) யார் என்று கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கபடுவதை யாரும் எதிர்க்க போவதில்லை.

    ReplyDelete
  14. //குழலி நம்பும் (அவரையும் சேர்த்த) ஒரு வன்னிய ஜாதி வெறி தரப்பை தவிர யாரும் மரக்காணம் கொலைகளை சிறுத்தைகள் திட்டமிட்டு செய்ததாக யாரும் சொல்லவில்லை. //
    மைடியர் ரோஸா வசந்த் 3/5/2017 மாலைமலர் பத்திரிக்கையில் மரக்காணத்தில் பாமக வினர்கள் இருவர் கொல்லப்பட்டது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 6 பேர் திட்டமிட்டு செய்தது நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது.

    இங்கே கூவிய அத்தனை பேரும் தவறு நான் ஒருவன் பேசியது மட்டுமே சரி என இந்த தீர்ப்பு நிரூபித்துள்ளது. உங்கள் அத்தனை பேருக்கும் அன்று நான் சொன்னதை ஒரு கோணமாக கூட எடுக்காதமைக்கு காரணம் உங்களிடம் புரையோடி போயிருந்த வன்னியர் எதிர்ப்பு. என் கண்ணில் படாமல் இருந்த இந்த லிங்க்கை தோண்டி கொடுத்த டாக்டர் பூவண்ணன் கணபதிக்கு நன்றி
    -
    குழலி

    ReplyDelete