Thursday, July 25, 2013

அரசியல் கருதுகோளும் அறிவு நிஜமும்

ஐஐடியில் நிலவும் பார்பனிய அரசியல் பற்றியும், அதே நேரம் அதற்கான எதிர்பரசியலை வசந்த கந்தசாமியை முன்வைத்து முன்னெடுக்க முடியாது என்கிற வாதத்தையும் கடந்த 10 வருடங்களாக வேறு வேறு இடங்களில் இணையத்தில் நான் முன்வைத்து இருக்கிறேன். 

வசந்தா கந்தசாமி இந்தியாவில் வேறு யாருடனும் ஒப்பிடமுடியாத மாபெரும் கணிதமேதை என்று அவரை சார்ந்தவர்கள் பொய்யாகவும், அவரை சாரத கணிதத்திற்கு சம்பந்தமில்லாதவர்கள் தவறாகவும் செய்தி பரப்பிக்கொன்டிருக்கிறனர். அவரது ஆரய்ச்சி கட்டுரைகளின் எண்ணிக்கைக்காக ஒருவேளை நீதிமன்றம் கூட அந்த பொய்யை உண்மையாக ஏற்று அவருக்கு ஆதரவாக தீர்ப்பு தரகூடும். அப்படி நடந்தால் கூட அவரது ஆய்வு கட்டுரைகள் குப்பை என்ற உண்மையை எந்த தயக்கமும் இல்லாமல் நான் சொல்லுவேன். குப்பைகள் எவ்வளவு எழுதி குவித்தாலும் ஒரே ஒரு உண்மையான இரண்டு பக்க பேப்பரின் அருகில் வரமுடியாது. ஆகையால் ஒரு மாபெரும் கணித மேதைக்கு பதவி உயர்வே தராமல் வஞ்சிக்கபடுவதாக சொல்லப்படும் செய்தி பொய்யானது. பதிவி நியமனத்தில் அவருக்கு ஏதேனும் தனிப்பட்ட அநீதி நிகழ்ந்திருக்கலாம். அது என்ன வகை அநீதி என்று கேள்விப்பட்டவைகளை மட்டும் வைத்து என்னால் முடிவுக்கு வரமுடியவில்லை; அவர் தரப்பு வாதத்தை மட்டும் வைத்தும் முடிவுக்கு வரமுடியாது; எதிர்தரப்பின் வாதத்தை நான் முழுமையாக அறியவுமில்லை. ஆனால் அது பார்பனரல்லாத ஒரே காரணத்திற்காக நடந்தது என்பதற்கு ஆதாரம் இருப்பதாக தோன்றவில்லை. அதே கணிதத்துறையில் இருக்கும் மற்ற பார்ப்பனரல்லாதவர்கள் எல்லாம் பார்பனியத்துக்கு கூஜா தூக்கியவர்கள் அல்ல. எந்த விஷயத்தையும் சிக்கல்கள் இல்லாமல் புரிய முனைவது வசதியாக இருக்குமே ஒழிய அரசியல் பாதுகாப்பானது அல்ல. 

இது தவிர ஐஐடி மீது குறிப்பாக இட ஒதுக்கீடு அரசியல் சார்ந்து விமர்சனமும் எதிர்ப்பும் கொண்ட அரசியல் நியாயமானது என்பதுதான் என் நிலைபாடு; அதற்காக தவறான உதாரணத்தை கொண்டாடுவது அந்த அரசியலுக்கு நண்மை பயக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. அவர் பெரியார் குறித்து ("Fuzzy and Neutrosophic analysis ofPeriyar's views on untouchability") எழுதியுள்ள நூல் எந்த பயனும், அறிவு உள்ளடக்கமும் அற்ற குப்பை மட்டுமல்ல, முழுக்க ஒரு ஏமாற்று வேலை. இதை என்னால் விரிவாக எழுதமுடியும்; ஆனால் என் அரசியல் முன்னுரிமை இதை எழுதுவதற்கு இல்லை. சமஸ்கிருதம் கணிணிக்கு ஏற்ற மொழி என்று வரும் ஒரு ஆர்.எஸ்.எஸ்.தனமான கட்டுரைக்கு எதிர்வாதம் வைப்பதே எனக்கான முன்னுரிமையாக இருக்கும். ஆனால் provoke செய்யப்படும் சவால் வந்து அவசியம் என்று தோன்றினால் இதற்காக வீணாகும் நேரத்தை ஒதுக்கி இந்த செயலில் ஈடுபட நேரலாம்.

2 comments:

  1. நண்பர் சங்கரபாண்டி என் ட்விட்லாங்கரை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறார்; அங்கே ஒருவரின் கருத்து நான் எழுதிய பதில் கீழே. இப்போதைக்கு இதை பற்றி மேலும் விவாதிப்பதை முடிந்தவரை தவிர்க்கிறேன். பின்னர் விவாதிக்க வேண்டுமா என்பது மற்றவர்கள் கையில் இருக்கிறது.


    https://www.facebook.com/sudalaimadan/posts/10201075345861132

    குப்பைகள் என்றும் ஏமாற்று வேலை என்றும் அந்த குறிப்பிட்ட பிரதிகளுடன் பல மணி நேரம் செலவழித்து வாசித்து, அதன் பின் ஏற்பட்ட கடுப்பை பெரிய அளவில் காட்டிகொள்ளாமல் எழுதியுள்ள கருத்து. இது புரியகூடியவர்கள் நேரடியாக என்னுடன் பேசலாம். விரிவாக விளக்குகிறேன். (ஆனால் ஒரு மாதம் கழித்து). சுமார் 600 'ஆய்வுகட்டுரைகளை' எல்லவற்றையும் வாசித்து கருத்து சொல்வது சாத்தியமில்லை. ஒரு தீவிர கணிதவியலாளன் ஒரு அளவிற்கு மேல் குப்பைகளை வாசிப்பது சாத்தியமில்லை. நான் மேலோட்டமாக பார்த்த அளவில் ஒரு.. ஒரே ஒரு பேப்பர் கூட தரம் வாய்ந்த ஜார்னலில் இல்லை; எதை அனுப்பினாலும் பப்ளிஷ் (அது கணிதரீதாக சரியாக இருக்கும் பட்சத்தில்) செய்யும் ஜார்னல்களிலேயே உள்ளது . மேத்ஸைநெட் யார் எழுதினாலும் பட்டியலிடும்; அது தரம் சார்ந்த பட்டியல் அல்ல. இந்த விஷயத்தை மறைத்து பேசுவது நேர்மையின்மை; தெரியாமல் பேசுவது விபரப்பிழை. அப்படியே அவை ரிவூ செய்யப்பட்டிருப்பதை வாசித்து எல்லாவற்றையும் நேரம் செலவழித் ஆராய்ந்து வேண்டுமானால் எழுதலாம். சாமர்த்தியமாக தர்ப்படும் தகவ்ல்களை எளிதில் உடைத்துவிட முடியும். ஆனால் எங்கே வெளியானது என்பதை முன்வைத்து அல்லாமல், நேரடியாக உள்ளடக்கம் சார்ந்தே என் கருத்தை கூறுகிறேன். பெரியார் பற்றி எழுதியுள்ள அந்த குறிப்பிட்ட பிரதியையே நான் ஏமாற்று வேலை என்கிறேன்; கணிதவியலாளர்களை ஏமாற்றுவது என்ற பொருளில் நான் சொலவில்லை; அது சாத்தியமில்லை. உள்ளூர் பெரியாரிஸ்டுகளை சமூக நீதி என்று போராடுபவர்களை ஏமாற்றும் வேலை. எவ்வளவு விரிவாக வேண்டுமானாலும் இதை பற்றி பேசத்தயார். ஆனால் இப்போதைக்கு நான் இது குறித்து நீளமாக பேசுவதாக இல்லை. அறிவுரீதியான ஆர்வம் என்றாலும், அசியல் சார்ந்ததாகவும் இருந்தாலும் என்னை அணுகலாம். ஆனால் சம்ப்ந்தபட்ட நபருக்கு ஆதரவாக என்றால், என்னிடம் விவாதிப்பது அவருக்கு நண்மை பயக்குமா என்று யோசனை செய்துவிட்டு தொடங்கவும்.

    ReplyDelete
  2. சங்கரபாண்டி, ஊகரீதியில் பேசிக்கொண்டிருப்பதற்கு பதில் சொல்லிகொண்டிருப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. ஆனால் உங்கள் (ஊக) கருத்துக்களும் பல தவறான பிம்பங்களை தருகிறது. வசந்தா உலகப்புகழ் பெற்ற கணித மேதையில்லை மற்ற எல்லோரையும் போலத்தான் என்பது மற்ற எல்லோரையும் மிகவும் கீழே இறக்குகிறது. உலகத்தின் அதி சிறந்த முக்கியமான பல கணித மேதைகள் இந்தியாவில் இருக்கிறார்கள். காலகாலத்திற்கும் நிற்கப்போகும் மிக மிக முக்கியமான பங்களிப்புகளை அளித்துள்ளனர். இதில் பார்பனரல்லாதவர்களும் பலர் உண்டு. கணிதத்தில் ஐஐடிக்கு (அதற்கு இருக்கும் பிரபலத்திற்கு மாறாக) கீழேதான் இடம் உண்டு என்றாலும், ஐஐடி சென்னையிலேயே வசந்தா போல குப்பைகளை உருவாக்கிக்கொண்டிருக்காமல் உருப்படியான வேலைகளை பலரும் செய்துகோண்டிருக்கிறார்கள். சிலரது பங்களிப்புகளை நேரடியாக அறிவேன். தொடர்ந்து (இன்னொரு ஐரோப்பிய சக ஜல்லியடிப்பாளருடன் இணைந்து) குப்பைகளை மட்டுமே உருவாக்கி வருபவர் வசந்தா. அது என்னமும் செய்துவிட்டு தொலையட்டும். இங்கே தமிழகத்தின் முக்கிய அரசியலை தனது சுயநலத்திற்காக அவர் ஹைஜாக் செய்கிறார் என்பதும், அறிவுரீதியாக மிக மோசமான முன்மாதிரியை ஏற்படுத்துகிறார் என்பதுமே என் அக்கறை. விஷயம் அறிந்தவர்களுடன், அல்லது விஷயம் அறிய திறந்த மனதுடன் இருப்பவர்களுடன் விவாதிக்க நான் தயராக இருக்கிறேன். எங்கேயும் இது குறித்து பேச தயாராக இருக்கிறேன்.

    ReplyDelete