இன்றய ' ̀கேணி' கூட்டத்தில் நாஞ்சில் நாடனின் பேச்சு என்னளவில் மிக சிறப்பாக, பயனுள்ளதாக இருந்தது. நான் சற்று தாமதமாக பேச்சினிடையில் சென்றேன். தலைப்பு மொழியை முன்வைத்த ஒன்றாக இருக்கலாம். தமிழ் மொழி என்றில்லாது, பொதுவாக மொழி என்பதன் வளம், அதன் செயல்பாடு குறித்து பேசினார். மிக பரந்த தளத்தில் மொழி சார்ந்த, தமிழ் சார்ந்த பல தகவகல்களுடன் அவர் பேசியதை என்னால் பதிவு செய்ய இயலாது.
அகராதிகளின் முக்கியத்துவம், இன்னும் பலவகை அகராதி+நிகண்டுகளின் தேவை, எழுத்தாளர் அதை பயில வேண்டிய அவசியம் என்பதை அவர் பார்வையில் விளக்குவதாக இருந்தது. பேச்சு வழக்கு, இலக்கியம், செவ்வியல் சார்ந்த தமிழின் பல பரிமாணம் கொண்ட வளம் அழிவதை உணர முடிந்தது. செய்ய வேண்டிய காரியங்கள் இருக்க செம்மொழி மாநாடு நடத்தும் போலித்தனத்த என்ன சொல்லி சாடுவது என்று தெரியவில்லை.
வேறு ஒருவர் நீளமா..க பேசியதன் இடையில் வெகுஜன எழுத்து என்பதன் தேவையும், நியாயமும் பற்றிய (எனது பார்வை சார்ந்த உண்மையான) கருத்தை நான் முன்வைத்தது, அந்த இடத்தில் தேவையற்றது என்று சொல்லிய பிறகு உணர்ந்தேன்.
பயனுள்ள கூட்டம்.ஞாநியும் அவரை சார்ந்தவர்களும் முக்கியமான ஒரு வேலையை, அர்பணிப்புடன் எந்த எதிர்பார்ப்பும் இன்றி செய்கிறார்கள். பங்கு பெற்று, பயனும் பெறுவது நாம் அவர்களின் நல்ல நோக்கத்தை அங்கீகரிப்பதாக இருக்கும் என்று தோன்றுகிறது.
Sunday, March 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
they could publish videos at least in gnani.net
ReplyDeleteயாரோ ஒருவர் வீடியோ எடுத்துக் கொணிடுந்ததை கவனித்தேன். கேணி அமைப்பை சார்ந்தவரா என்று தெரியாது. அதை வெளியிடுவது மற்றவர்களுக்கு பயனுள்ளதா இருக்கும்.
ReplyDelete'' வேறு ஒருவர் நீளமா..க '' அது நான் தான்
ReplyDelete// அந்த இடத்தில் தேவையற்றது என்று சொல்லிய பிறகு உணர்ந்தேன்.//
நாஞ்சில் நாடன்னின் விகடன் எழுத்துமட்டுமே எனக்கு அறிமுகம். கூட்டத்தில் பேச்சு விரிவான வாசகர் பறப்பு காத்திறமான எழுத்தாளர்களுக்கு இல்லாதது குறித்து இருந்ததால் நான் என் கருத்தை முன்வைத்தேன்.
என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றது என்ற என்னத்தில் தான் அது நீளமா..க போனது, என் வெளிப்பாட்டு திறன் குறைவினால் அது நிகழ்ந்திருக்கலாம்.
வெகுஜன எழுத்து என்பதன் தேவையும், நியாயமும் உணர்ந்து அதறகான மரியாதயை
தரவேண்டும் என்பதுடன், வெகஜன் எழுத்து வழியாக காத்திரமான எழுத்திற்க்கு
ரசனையான அறிமுகம் தரும் ஒரு சில நிபுணர்களை உருவாக்கவேண்டும் என்பது
தான் சாரம்.
அப்படி எழுதுபவர் படைப்பாலியாக இருக்கவேண்டும் என்ற அவசியம்
இல்லை.இலக்கியத்தில்,திரைபடத்தில், நுன்கலைகளில் தேர்ந்த ரசனை
உள்ளவர்களாக இருந்தால் போதுமானது.
அவர்கன் மொழி வெகுஜன தன்மையுடையதாக இருக்கவேண்டும் உதாரணமாக
ஞானி,ஹாய்மதன்,யுவகிருஷ்னா.
இதை சுஜாதா தனது கற்றதும் பெற்றதுமில் செய்தார்.ஆனால் ஞானி, சுஜாதா காத்திரமான எழுத்துக்கு சொந்தக்காரர் அல்ல என்ற தொனியில், உங்கலுக்கு நிறைய சுஜாதா போலவெண்டும் என்று சொல்லியதாக எனக்கு தோன்றியது எனவே மறுபடியும் சுஜாதாவின் கற்றதும் பேற்றதும் போல என்றேன். மீண்டும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதால் நிருத்திக் கொண்டேன்.
புஷ்பா தங்கதுரை,ராஜேஷ்குமார் அகியவரிகளுக்கும் இதற்க்கும் சம்மந்தம் இல்லை.
அவர்கள் பணி அவர்கள் தளத்தில் சிறப்பானதே.
dhakshina murthy
அன்புள்ள தக்ஷிணாமூர்த்தி,
ReplyDeleteஉங்கள் பெயர் மறந்துவிட்டதற்கு மன்னிக்கவும். நீங்கள் வெகு நேரமாக சொல்ல விரும்பிய விஷயம் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை என்று தோன்றியது. வெகுஜன எழுத்துக்கும் ஒரு நியாயமும், தேவையும் இருப்பதாக நீங்கள் சொல்வதாக நான் புரிந்து கொண்டு, அதை நேரடியாக சொல்ல, புஷ்பா, ராஜேஷ்குமார் பெயர்களை சொன்னேன். (கூட்டத்தில் அப்போது எழுந்த சிரிப்பு மிகவும் அசிங்கமான ஒன்று.) ஆனால் நீங்கள் தமிழ் சூழலில் 'சுஜாதாக்கள் அதிகமாக வேண்டும்' என்பதாக சொல்வது பிறகு புரிந்தது. ஞாநியும் அதை விளங்கி கொண்டு சொன்னார்.