இப்போதுதான் தினமலர் "மதுரை பேச்சுக்கு மதுரையிலேயே மனம் வருந்திய திருமா" வீடியோ பார்த்தேன்.
நியாயமாக திருமா இறங்கி வந்து தெரிவித்திருக்கும் வருத்தத்தை உயர் அரசியல் பண்பாக நாம் பாராட்ட வேண்டும். ஆனால் ராமதாசோ விஜய்காந்தோ, வேறு எவரோ எவ்வளவு மோசமாக பேசியிருந்தாலும் அடுத்த நாள் அவர்களாக வருத்தம் தெரிவிக்க மாட்டார்கள், எதிர்வினைகளுக்கு பிறகும் கூட தெரிவிக்க மாட்டார்கள்; அது மட்டுமல்ல மோசமாக பேசப்பட்டவர்களும் எதிர்காலத்தில் அவர்களுடன் உறவாடும்போது அதை நினைவுக்கு கொண்டுவந்து சஞ்சலம் கொள்ளமாட்டார்கள் என்பதை இன்னும் கவனமாக கவனிக்க வேண்டும். தன் பேச்சுக்கு வருந்துவது ஒரு உயர்ந்த நிலை. ஆனால் நம் சாதிய சமூகத்தில் திருமாவிடம் வெளிபடும் அந்த பண்பை பாராட்ட தோன்றவில்லை. அதிலும் அரசியல் பேச்சில், ஒப்பீட்டளவில் பெருந்தவறாக எதுவும் சொல்லியிராத போது தெரிவிக்கும் வருத்தத்தை, பெருந்தன்மைக்குள் மட்டும் அடக்கிப் பார்க்க முடியவில்லை. மேலும் ஊழலில் அவர்கள் கட்டு விரியன், கண்ணாடி விரியன்தான், சாதிவெறியில் அவர்கள் நல்ல பாம்புதான் என்று பொதுவெளியில் யாரவது சொல்லத்தான் வேண்டும்.
No comments:
Post a Comment