Tuesday, May 1, 2012
ஞானத்தின் மடத்தனம்.
நேர்மையற்ற குதர்க்க புத்தியை தர்க்க அடைப்படையாக கொண்டு, தனக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடிய மடத்தனத்தை, ஏதோ ரொம்ப தர்மாவேசம் போல ஞாநி முன்வைப்பது இது முதல் தடவை அல்ல. திருவாசகம் வெளிவந்த போதே கேனத்தனமான பல கேள்விகளை, அரசியல் ஆவேசமாக முன்வைத்தவர்தான். இந்திய இசைச்சூழலில் யாருக்கும் சாத்த்தியம் ஆகாத சாதனையை நிகழ்த்திய மேதையை 'அரசு பணத்தை திருடினார்' என்று எந்த லாஜிக்கும் இன்றி பிதற்றியவர்தான் இவர்.
இப்போது சமீபத்தில் பலரை வேறு உலகிற்கு அழைத்துச் சென்ற How to Name it நிகழ்ச்சி அவர் கையில் மாட்டியிருக்கிறது. 'How to name it' நிகழ்தியது ராஜா அல்ல; அவரே நடத்தினாலும் யார் வயலின் வாசிப்பது என்பதை தீர்மானிக்க அவருக்கும், நிகழ்வை நிகழ்த்தியவர்களுக்கும் எல்லா உரிமையும் உள்ளது. யாருக்கேனும் உரிமையுள்ளதை திருடினாலோ, பணம் தராமல் ஏமாற்றினாலோதான் குற்றம். நரசிம்மனை வயிலின் வாசிக்க வைக்கவில்லை என்பதில், என்ன எழவு மனிநேயம் குலைந்து போகிறது? உலகில் உள்ள குயுக்திகள் அத்தனையையும் சேர்த்தாலும் இதில் மனித நேயத்திற்கு ம், நேர்மைக்கும் என்ன சம்பந்தம் வந்தது என்று புரியவில்லை. நரசிம்மன் ராஜா படைத்த இசைக்கோர்வையை, எழுதிக்கொடுத்தப்படி மேற்பார்வைக்கு ஏற்ப வாசித்தவர். ஒருவேளை ஞாநி எழுதும் குப்பை நாடகங்கங்களில் எல்லாம் முதன்முறை நடித்த நடிகர்களைத்தான் எல்லாமுறையும் நடிக்கவைப்பாரா? ஒருவேளை ஞாநி அப்படி ஒரு பைத்தியக்கார நடைமுறையை பினபற்றினாலும் மற்றவர்களுக்கு என்ன தலையெழுத்து?
அடுத்து கேஸட்டில் பெயர் போடாதது. ரஹ்மான் இசைக்கலைஞர்களின் பெயரை போட்டாராம்; ராஜா அன்று போடவில்லையாம். ஏன் M. S. விஸ்வநாதனும், நௌஷாத்தும், பர்மன்களும் கூட யார் தன் குழுவில் ட்ரம்ஸ் வாசித்தார்கள் என்ற செய்தியை ரெகார்டில் பதிவு செய்ததில்லை. ஜிகே வெங்கடேஷின் சில பாடல்களை இளையராஜா எழுதிக் கொடுத்ததாகவே நம்பிக்கைகள் உண்டு. எத்தனை கேசட்டில் ராஜாவின் பெயரை வெங்கடேஷ் பதிவு செய்திருக்கிறார். A.R.ரஹ்மான் செய்தது பாரட்டுக்குரியது என்றாலும், அதில் நேர்மையாக வேறு வழியில்லை என்பதுதான் உண்மை. ரஹ்மானின் இசை உருவாகும் விதத்தை அறிந்தவர்களுக்கு, அதில் மற்ற இசைக்கலைஞர்களின் கிரியேடிவான பங்கு உண்டு என்கிற விஷயம் நன்றாக தெரியும். ரஹ்மானும் மற்ற இசை கலைஞர்களும் அதை சொல்லியும் உள்ளனர். ராஜா இசையில் அவரன்றி படைப்புரீதியாக அங்கு யாருக்கும் எந்த பங்கும் இல்லை. முழுக்க அவர் தனிமையில் எழுதியது மற்றவர்களால் வாசிக்கப்படுகிறது. ஆயினும் ரஹ்மான் முன்னுதாரணம் காட்டிய நடைமுறையை பின்பற்றி இசைத்தவர்களின்பெயரை போடத் தொடங்கினார். அப்படியே போடாமல் விட்டாலும் அதில் எந்த மனிநேயத்திற்கு எதிரான செயலும், அயோக்கியத்தனமும் இல்லை. ஞாநி சொல்வதுபோல் 'தன் இசையை சிறப்பாக வெளிப்படுத்தி தனக்கு புகழ் சேர்த்துத் தரும் கலைஞர்களை எப்போதுமே அலட்சியப்படுத்தி இருட்டடிப்பு செய்து வருவ'தாக ஞாநி என்கிற சைக்கோவை தவிர இளையராஜாவிடம் பணியாற்றிய யாராவது சொல்லியுள்ளார்களா?
எத்தனையோ இரக்கமற்ற சமூக நிகழ்வுகளுக்கு பயன்படுத்த வேண்டிய மனித நேயமின்மை என்கிற வார்த்தையை எந்த லாஜிக்கும் இல்லாமல் இளையராஜாவை நோக்கி இவர் பயன்படுத்தவேண்டிய காரணம் என்ன? இந்தியா முழுக்க யாருடனும் ஒப்பிட முடியாத இந்த மேதையின் மீதான இந்த வெறுப்பை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஞாநியிடம் வெளிபடுவது அரசியல் சார்ந்த மனநோயா, அல்லது சாதி சார்ந்த தலித் வெறுப்பா, வேறு ஏதாவது வெளிவராத பிரச்சனையா என்று புரியவில்லை. அது எப்படியிருந்தாலும் சமூகத்தில் ஒரு நேர்மையான கருத்தாளராக மதிக்கப்படும் இவர் ராஜா மீது காட்டும் இந்த வெறுப்பை அம்பலப்படுத்துவது முக்கியமானது. இவரின் லூஸுத்தனமான வாதங்களை முதிராத இணைய ஆவேசக்காரர்கள் தொடரப்போவதுதான் கவலைக்குரிய விஷயம். இளையராஜா போன்ற ஒருவர் பெங்காலில் பிறந்திருந்தால் தங்கள் அடையாளமாக கடவுளாக கொண்டாடியிருப்பார்கள். இங்கே இல்லாத பொல்லாத தர்க்கத்தை எல்லாம் கண்டுபிடித்து அவரை காலிபண்ணுவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். நம் அறிவு நோய்கூறுக்கு ராஜாமீதான இந்த வெறுப்பை விட சிறந்த உதாரணம் வேறு கிடையாது.
Subscribe to:
Post Comments (Atom)
என்ன எழவோ, ப்ளாகர் தன் வடிவததை மாற்றிய பின் பின்னூட்டத்தை வெளியிட முடியவில்லை. Kameshratnam அவர்கள் எழுதிய பின்னூட்டம் கீழே.
ReplyDeleteRespected Gnani Sir,
Did you attend the how to name it show? You are completely wrong in many things. I have taken the link from your facebook page:
"நிகழ்ச்சியில் அவர் பெயர் ஒரு முறை கூட சொல்லப்படவும் இல்லை". Ilayaraaja sir mentioned V S Narasimhan sir's name in a piece and he said VSN and Jerry both of them played the piece and Mr Jerry is here and he introduced Jerry to the audience. How do you Mr. VSN was invited or not? Did Mr VSN confirm with you that he was not invited?
" ஏ.ஆர்.ரஹ்மான். அவர் தன் முதல் ஆல்பத்திலேயே டிரம்ஸ், கிடார், புல்லாங்குழல், வயலின் , செல்லோ கலைஞர்களின் பெயர்களையெல்லாம் வெளியிட்டார். "
Sir, have you seen the LP Record of how to name it and the cd..it has all the credits duly given.
Also Raaja is a complete music director and why should he give credits to everyone. If Rahman does it because he lets others improvise.
Please gnani sir verify facts and then talk.
Thanks
Kamesh
@sharankay ட்வீட்லாங்கரில் எழுதியுள்ளது
ReplyDeletehttp://www.twitlonger.com/show/h80e8l
தோழர் ஞாநி,
மீண்டும் தம் வெறுப்பை உமிழ துவங்கி விட்டார். https://www.facebook.com/permalink.php?story_fbid=3455987251123&id=1614093607&fb_source=message இவருக்கு ராஜா மீது என்ன வெறுப்பு என்றே தெரியவில்லை! ஒரு தலித் காலில் பார்ப்பனர்கள் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் அளவுக்கு உச்சானி கொம்பில் நிற்கிறார் என்றா அல்லது ராசைய்யா தமது இசையின் தரத்தால் ஒரு கடவுளைப் போல் கொண்டாடப் படுவதை சகிக்க முடியவில்லை என்பதாலா? ரஹ்மான தமது சினிமா ஆல்பங்களில் இசை கலைஞர்களின் பெயரை சேர்த்து வெளியிடுவதற்கு வெகு காலம் முன்பே இசையமைக்க பட்ட ’ஹவ் டூ நேம் இட்’ இன் ’ஆல்பம்’ கவர் இதுதான் http://www.thehindu.com/multimedia/archive/01065/27MP_HOW_TO_NAME_I_1065272a.jpg மிக தெளிவாக ‘எல்லா’ இசை கலைஞர்களும் பெயர் குறிப்பிடபட்டு இருக்கிறது. இசை கலைஞர்களின் பெயர் குறிப்பிடுவது என்பது உலகளவில் தனி பாப்/கிளாசிக்கல் ‘ஆல்பங்களுக்கு’ கடைபிடிக்கபட்ட நடைமுறை. எந்த சினிமா சவுண்ட்ராக்கிலும் கம்போஸரை தவிர இசைத்த கலைஞர்களின் பெயர் இருக்காது . ரஹ்மான் தமது சினிமா இசையை பாப் ஆல்பங்களாகவே பார்த்ததும் அதில் இசைக்கும் எல்லா கலைஞர்களின் படைப்பு ரீதியான பங்கேற்பை ஏற்று கொண்டதுவுமே காரனம் அவர்கள் பெயர்களையும் சேர்த்து கொண்டதற்கு. ஆனால் ராஜா உலகின் நடைமுறை எதுவோ அதையே பின்பற்றி தமது பெயரை மட்டுமே தாம் இசை அமைத்த சினிமா ‘சவுண்ட்ராக்குகளில்’ போட்டு கொண்டார். மேலும் ராஜா தமது இசை கோர்வைகளில் உலகளாவிய கம்போஸர்களின் பானியிலேயே இசைஞர்களின் படைப்பு ரீதியான பங்கேற்பை ஏற்பதில்லை. இந்த எளிய விஷயம் கூட தெரியாமல் இதை ஒரு பெரிய குற்றம் போல் பல ஆண்டு காலமாக ராஜாவுக்கு எதிராக ஞாநி கக்கி வரும் விஷம் அருவருப்பாக இருக்கிறது. கண்டிக்கதக்கது. இதற்கு முன்பு நிகழ்ந்த நத்திங் பட் விண்ட் லைவ் கான்சர்ட்டிலும் அதில் வாசித்த ஹரி பிரசாத் செளராஷியா கலந்து கொள்ளவில்லை. ஆனால் தமது பேச்சில் அவரை குறிப்பிட்டார் ராஜா அதை போலவே இங்கும் நரசிம்மன்னின் பெயரை குறிப்பிட்டார் ராஜா. அதை நேரில் பார்த்தவர்களான நாங்களும் இந்த ஒலிப்பதிவுமே சாட்சி. https://t.co/S8u4UQj3 https://t.co/wYFrPK8D
மேலும் இவ்விரு நிகழ்ச்சிகளும் அவரது மகளான பவதாரினி மூலம் ஏற்பாடு செய்யபட்டு ராஜாவின் குழுவின் முக்கிய நெறியாளுனரான ‘பிரபாகர்’ என்பவரால் மீள் உருவாக்கபட்டு நிகழ்த்தபட்டது. ராஜா ரிஹர்சல்களில் கூட பங்கு பெறவில்லை! அவரும் மற்றவரை போல் ஒரு பார்வையாளர் என்ன மேலதிகமாக அவரது இசை ஆக்கம் என்பதால் ’எ ட்ரிபியூட் டூ ராஜா’ என்று சொல்லிக் கொள்ளலாம். என்ன பாடல்கள் இடம் பெரும் எப்படி நடக்கும் நிகழ்வு என்பது கூட அவருக்கு தெரியாது. என்வேதான் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தில் சில சினிமா பாடல்கள் இசைக்கபட்டதை, பாஹ்-தியாகைய்யர் படங்களை மேடையில் வைத்து கொண்டு இந்த பாடல்களை பாடலாமா அது தவறு என்று மேடையிலேயே பவாவை கண்டித்தார். பொது விஷயங்களில் நேர்மையாளராகவே அறியபடும் ஞாநி ராஜா விஷயத்தில் மட்டும் இப்படி நேர்மையற்ற அற்பதனமான வாதங்களை வைத்து மனித தன்மையிலிருந்து சறுக்கி விடுகிறார். பகுத்தறிவு என்பதை கண்மூடி பூனைப் போல் அனுகுவதின் விபரீதம் இது. சமூகத்தை திறனாய்வு செய்வது இருக்கட்டும் தமது கருத்து நிலையை திறனாய்வு செய்வாரா ஞாநி? ஏனென்றால் மனிதத் தன்மையும் நேர்மையும் இல்லாமல் ஏராளமான திறமை இருந்து என்ன பயன்!
ஞாநியின் நேர்மையும் யோக்கியதையும் என்னவென்று தெளிவாக தெரியும் தருணம் இது. தான் முன்வைத்தவை தவறான தகவல் என்று தெளிவா க தெரிந்தபின் மன்னிப்பு கேட்பதுதான் அறிவுநேர்மை. ஞாநி குறைந்தபட்ச வருத்தம்கூட தெரிவிக்கவில்லை. சரவணகார்த்திகேயன் ஞாநியின் அடிப்படையே தவறு என்று சுட்டிக்காட்டியபின்னும் கண்டுகொள்ளாமல், 'திறமை, மேதமை, நேர்மை' என்று ஜல்லியடிக்க தொடங்கியாயிற்று; 'அவனை திருத்த முடியுமென்றும் நான் நினைக்கவில்லை' என்ற ஒரு தீர்ப்பு வேறு; வெட்கமும் அறிவுநாணயுமும் இன்றி இயங்குவதில் ஞாந அஞ்ஞான பேதமில்லை என்று தெரிகிறது. இவருக்கு அரசியல்வாதிகளின் அறிவுநேர்மை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்று புரியவில்லை.
ReplyDeleteராஜன்குறைக்கு அளித்த பதிலில் //நான் பொதுவாக நிதானப் போக்கையே கடைப் பிடிப்பவன்தான். ஆனால் அறச் சீற்றத்தை நிதானத்துக்கு பலி கொடுக்க முடியாது. மனிதத்தன்மையற்ற, நேர்மையற்ற செயல்களையும் அற்பத்தனமான நடவடிக்கையையும் வேறு எந்த சொற்களில் வர்ணிப்பது என்று எனக்குத் தெரியாது./ என்கிறார் ஞாநி. மனிததன்மையை, நேர்மயை, அற்பத்தனத்தை இதற்கு தொடர்பு படுத்தும் ஞாநியின் முட்டாள்தனமான வாதம் ஒருபக்கம் இருக்கட்டும்; தன் தகவல்கள் தவறு என்று நிறுவியபின்னும், அதை சுட்டிக்காட்டிய பின்னும் 'அறச்சீற்றத்துடன்' இயங்க ரொம்பதான் மானம் கெட்டு இருக்கவேண்டும். என் நட்பு அழைப்பை ஃபேஸ்புக்கில் ஞாநி (இன்னமும்) ஏற்கவில்லை; ஏற்றால் நேரடியாக அவர் பக்கத்திற்கே சென்று ஒருகை பார்க்கமுடியும். அதற்கான தைரியமும் நேர்மையும் அவருக்கு இருக்கும் என்று தோன்றவில்லை.
கண் எதிரில் இந்த சுட்டி http://www.thehindu.com/multimedia/archive/01065/27MP_HOW_TO_NAME_I_1065272a.jpg இருக்கிறது; புரூனோவும் ஞாநியும் வேறு கதை பேசிககொண்டிருக்கிறார்கள். புரூனொவிற்கு வெறுப்பை தவிர நேர்மை போன்ற எந்த குணமும் கிடையாது. இந்த சுட்டி கண்ணுக்கே தெரியாதது போல் நடிக்கும் ஞாநியும் அதே கேஸ்தான் என்று தெரிகிறது. (ஞாநி என்னை நண்பனாக இன்னமும் அனுமதிக்காத்தால் அவர் தளத்தில் இதை எழுதி அவர் மானத்தை வாங்க முடியவில்லை.)
ReplyDeleteராஜாவின் பக்கமுள்ள நியாயத்தை இந்த ரோஜா அழகாக ஆதாரபூர்வமாக எடுத்துரைத்திருக்கிறார்! இந்தக் கட்டுரையில் ஆசிரியர் ரோசாவசந்த் சொல்லியிருக்கும் பெரும்பாலான கருத்துகளில் எனக்கும் முழு உடன்பாடு உண்டு. இந்த சர்ச்சையை அறிவுபூர்வமாக எதிர்கொள்ள நம்மைப் போன்றவர்களால் முடிகிறதே என்று எண்ணி மகிழும் அதே நேரத்தில், நம்முடைய பொக்கிஷமான நம் ராஜாவைக் கொண்டாடாமல் இப்படி அவமானப்படுத்துகிறோமே; நாமெல்லாம் ஒரு சமூகமாக இளையராஜாவின் இசையால் நன்மையடையத் தகுதியானவர்கள் தானா என்னும் கேள்வியைத் தவிர்க்க என்னால் முடியவில்லை!
ReplyDeleteராஜாவின் பக்கமுள்ள நியாயத்தை இந்த ரோஜா அழகாக ஆதாரபூர்வமாக எடுத்துரைத்திருக்கிறார்! இந்தக் கட்டுரையில் ஆசிரியர் ரோசாவசந்த் சொல்லியிருக்கும் பெரும்பாலான கருத்துகளில் எனக்கும் முழு உடன்பாடு உண்டு. இந்த சர்ச்சையை அறிவுபூர்வமாக எதிர்கொள்ள நம்மைப் போன்றவர்களால் முடிகிறதே என்று எண்ணி மகிழும் அதே நேரத்தில், நம்முடைய பொக்கிஷமான நம் ராஜாவைக் கொண்டாடாமல் இப்படி அவமானப்படுத்துகிறோமே; நாமெல்லாம் ஒரு சமூகமாக இளையராஜாவின் இசையால் நன்மையடையத் தகுதியானவர்கள் தானா என்னும் கேள்வியைத் தவிர்க்க என்னால் முடியவில்லை!
ReplyDeleteவிஜய், உங்கள் கருத்துக்கு நன்றி; இந்த பதிவும் பின்னூட்டங்களும் உடனுக்குடன், ஞாநி எழுதி அடுத்த சில நிமிடங்களில் எழுதப்பட்டது. அதனால் சில கடுமையான வார்த்தைகள்; அதை தவிர்த்து கூட எழுதியிருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.
ReplyDelete/நாமெல்லாம் ஒரு சமூகமாக இளையராஜாவின் இசையால் நன்மையடையத் தகுதியானவர்கள் தானா என்னும் கேள்வியைத் தவிர்க்க என்னால் முடியவில்லை!/
இப்படி சந்தேகம் வர எல்லா நியாயமும் உண்டு. ஆனால் எண்ணிவிடக் கூடிய சிலரை தவிர தமிழ் சமூகம் இளையராஜாவை கொண்டாடுகிறது என்பதுதான் உண்மை. இளையராஜா அளவிற்கு பரந்து பட்டு, தீவிரமான ரசிகர்கள் தமிழகத்தில் இருப்பது போல் வேறு யாருக்கும் இருப்பதாக தோன்றவில்லை. இன்றய 'கனவு தொழிற்சாலை'யின் சந்தை வேறு பக்கம் இருந்தாலும், வெகுமக்களின் ரசனை பெரும்பாலும் ராஜா பக்கம் இருப்பதை தமிழகத்தில் பயணிக்கும் போதெல்லாம் அறியலாம். அதனால் சோர்வடைய தேவையில்லை.