நாடு கடந்த தமிழீழ அரசு குறித்த ஷோபாசக்தியின் கட்டுரை மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு. அதை இங்கே ஒரு குட்டி பதிவாக வரும் நாட்களில் எழுதலாம் என்று நினைத்திருந்தேன். முதலில் இலங்கையில், ஈழத்தில் தீவிரமாக எத்தனையோ நடப்பதும், அதை கேள்வி கேட்க நாதியில்லாமல் இருக்கும் கொடூர யதார்த்தத்தில் (நடந்ததை கேட்பது வேறு) நாடு கடந்த அரசு என்ற 'வேடிக்கையை' விமர்சிப்பதை முதற்கரிசனமாக ஷோபாசக்தி கொள்வதே எனக்கு மிகவும் பிரச்சனைக்குரியது. ஆனால் 'உங்களின் அரசியல் விருப்புகளிற்கு ஈழத்து மக்களை நீங்கள் பலிகொடுக்க முடியாது. எதிர்கால ஈழத் தமிழர் அரசியல் இயங்குதிசை அவர்களால் மட்டுமே தீர்மானிக்கப்படும். உறுதுணை மட்டுமே உங்களது வேலை.' என்ற அளவில் சோபாவை ஏற்பதாக ட்விட்டரில் எழுதியிருந்தேன். இதை தொடர்ந்து பெயரிலி எழுதிய ட்விட்களில் உள்ள பல கருத்துக்களை நான் ஏற்கிறேன். சொல்ல போனால் அடிப்படையில் கிட்டதட்ட முழுவதுமே எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் நான் முன்வைக்கும் மொழி மாறியிருக்கும். வேறு சில விஷயங்களை சொல்லியிருப்பேன்.
இவை இப்படியிருக்க நாடு கடந்த அரசு குறித்து எனக்கு பெரிய நம்பிக்கைகள் எதுவும் இல்லை. ஆனால் இப்படி ஒரு அரசியலை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருப்பது தேவை என்றே நினைக்கிறேன். இது அரசியல் அல்ல, அரசியல் என்பது இடது சாரித்தனமாக (சாதிய எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு எல்லாமே இதில் சேர்த்தி) பேசுவது மட்டுமே என்று ஷோபா வலியுறுத்துவது போல் நான் கருதவில்லை. சோபாசக்தி கேடாக, கேவலமாக நினைக்கும் முதலாளித்துவ ஏகாதிப்பத்திய அரசாங்கத்திடம் மனு சமர்ப்பிப்பது கூட தேவை, சோபா அ.மார்க்ஸ் போன்றவர்கள் முன்வைக்கும் அரசியலை விட நடைமுறைக்கு யதார்த்தத்திற்கு தேவையானது என்று நினைக்கிறேன் - அதில் சிலரது சுயநலன், ஊழல் என்பன இருந்தாலும். நாடுகடந்த அரசு என்பதை சாக்காக வைத்து அடக்கு முறையை இலங்கை அரசு தர்க்கப்படுத்தி அவிழ்த்துவிடும் என்பது ஒரு ஏற்கத்தக்க வாதமாக எனக்கு தோன்றவில்லை. தற்சமய இலங்கை அரசு ஈராக் தாக்குதலின் போதான அமேரிக்க திமிரை விட அதிக திமிருடன் இயங்கி வருகிறது. அமேரிக்கா ஐநா அங்கீகாரத்துடன்தான் ஈராக் மீது படையெடுக்க விரும்பியது. அங்கீகாரம் கிடைக்காவிட்டால் அங்கீகாரம் தேவையில்லை என்பதை உலகுக்கு உணர்த்தும் வாய்ப்பாக அதை எடுத்துக் கொண்டு தான் நினைத்ததை நிறைவேற்றியது. இலங்கையும் அதே நிலையில்தான் உள்ளது. தமிழ் மக்களின் அரசியல் சார்ந்து இலங்கைக்கு எந்த அழுத்தமும் தர வாய்பில்லாத, எந்த நியாய அங்கீகாரமும் தேவையில்லாத நிலையில்தான் உள்ளது. ஆகையால் ஷோபாசக்தியின் கட்டுரையில் உள்ள ஒரே முக்கிய பாயிண்டான இந்த *புதிய* அடக்குமுறை வரும் என்ற வாதமும் எனக்கு சரியாக படவில்லை.
பெயரிலி எழுதிய ட்விட்களை அவர் ஒரு பதிவாக விரிவாக எழுத வேண்டும் என்பது என் வேண்டுகோள். அதை செய்வாரா என்பது தெரியாததால் அவரது ட்விட்களை ஒன்று சேர்த்து கீழே பதிகிறேன். இனி இதாலிக்கில் வருவது பெயரிலி எழுதியது என்பதை நினைவில் வைத்து வாசிக்கவும். அப்படியே வெட்டி ஒன்றுஇ சேர்த்து ஒட்டியது மட்டும் என் வேலை. இதில் அவருக்கு ஆட்சேபம் இருக்கும் பட்சத்தில் நீக்கிவிடுவேன்.
சோபா போன்றவர்களும் இன்னும் பலரும் பொதுவாக இதனைச் சொல்லிவிட்டுப்போகின்றார்கள். ஆனால், அதற்கான இவர்களது செயற்றிட்டம் என்ன? ஈழத்தமிழரின் அரசியல் இயங்குதிசை அவர்களாலேதான் தீர்மானிக்கப்படும். உண்மை. ஆனால், இன்றைக்கு அவர்களின் நிலைமையும் வருமானமும் என்ன? உல்லாசப்பிரயாணத்துறையிலே வரவீட்டுதலா? அவர்களின் குடியிருப்புகளிலே நடக்கும் சிங்களக்குடியேற்றங்களுக்கு யார் குரல்கொடுப்பது?
ஸ்ரீலங்கா அரசின் செயல்களையெல்லாம் புலிகளிலே போட்டுவிட்டு, சிங்கள, முஸ்லீம் மக்களோடு ஆரத்தழுவுவோம் என்று சொன்னால், கைதட்டி வரவேற்கப் பலரிருக்கின்றனர். இந்தியர்கள், மார்க்ஸியர்கள், தலித்தியவாதிகள், உதிரிகள்,மாற்றுக்கட்சிகளென்று சொல்லிக்கொள்கின்றவர்கள்.
சொல்லப்போனால், இலங்கையிலே இனப்பிரச்சனைக்குக் காரணமே விடுதலைப்புலிகள்தான் என்று கையைக் கழுவிவிட்டுப்போக எல்லோருக்கும் வசதியாகிவிட்டது :-(
நாடுகடந்த அரசு என்பதிலே எனக்கு உடன்பாடு பெரிதுமில்லை - அது விடுதலைப்புலிகளின் எச்சமாக ஷோசபோல ஆங்கிலச்செவ்விகளிலே தனக்கான போராளிவிம்பத்தை உருவாக்கிக்காட்டிக்கொள்ளும் ஆட்களுக்கும் எடுத்ததற்கெல்லாம் பாசிசம் பினாமி சியோனிசம் என்று அரசியல்நடைமுறைப்பாதிப்பு எதுவும் இல்லாமலே கதறும் ஸ்ரீரங்கன், ரயாகரன் போன்றோருக்கு வாய்ப்பந்தல்போட வசதிப்படுவதாலே. ஆனால், குறைந்தளவு அகிலம் தழுவிய ஓர் அழுத்தத்தை இலங்கை அரசுக்கு ைக்கின்றோமென்ற திட்டமேனும் அவர்களிடமிருக்கின்றது. ஷோபாவுக்கும் லும்பினி அ. மார்க்ஸுக்கும் ஸ்ரீரங்கனுக்கும் ரயாகரனுக்கும் என்ன திட்டம்?
நாடுகடந்த அரசு என்ற தலைப்பினை பாலஸ்தீனம், செச்சினியா, தென்சூடான் போன்றவற்றின் அடிப்படையிலே அவர்கள் பேசும் குரலுக்காக அமைத்தனர் எனமுடியாதா? பாலஸ்தீனியருக்கு என்றால் சரி, ஈழத்தமிழருக்கென்றால் இவர்களுக்கு ஆயிரம் கேள்விகள். நாடுகடந்த அரசு என்றில்லாமல் ஈழப்பாட்டாளிகளின் கூட்டாளிகள் என்று தலைப்பினைப் போட்டுவிட்டு இருந்தால், ஈழத்திலே இருப்பவர்களுக்கு எல்லாப்பிரச்சனையும் தீர்ந்துவிட்டதாக அர்த்தப்படுமா? இப்படியாக அமுக்கிவிட்டுத் தாமும் பேட்டிகளும் போஸுகளும் பதிவுகளும் மட்டும் போட்டுக்கொண்டிருந்தால், இவர்களுக்கும் அ. முத்துலிங்கத்துக்கும் என்ன வித்தியாசம்? போய் groundviews முதல் கொஞ்சம் அரசியலிலே நிதானம் நிற்க எழுத முயலும் இடங்களிலேகூடப்பாருங்கள். status quo..
விடுதலைப்புலிகள் என்ற பயங்கரவாதிகள் ஒழிந்துவிட்டார்கள். இனியேனும், ஸ்ரீலங்கா அரசு என்ற புள்ளியிலேதான் தொடங்கமுடியும் - ஓரிரு விதிவிலக்கு. முஸ்லீங்களைக் கொன்றார்கள் என்று "வன்னிப்"புலிகளையே இன்னும் காட்டும் இவர்களுக்கு அந்நேரத்திலே விரல்காட்டிய "கருணா"ப்புலிகளைப் பத்திரமாகக் கொழும்பிலே கொண்டுபோய்ச்சேர்க்கமுடிகின்றது. டக்ளஸ் தேவானந்தாவுடன் எதுவரை பௌஸருக்கு எதுவிதமான அரசியற்றொடுப்பும் இல்லையென்று மனிதாபிமானம் முன்னிட்ட செவ்வியை அவருக்குக் கொடுத்த ஷோபாசக்தி சொல்வாரா? செய்த தவறுகளையும் ஏன் ஸ்ரீலங்கா, இந்தியஅரசுகள் இழைத்த குற்றங்களையும் விடுதலைப்புலிகள்மீது தள்ளிவிடுவது இவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆதரவாளர்களும் இந்நாள் திடீர்மனிதக்காவலர்களுக்கும் வசதி.
கொல்லப்பட்ட அப்பாவிமுஸ்லீங்கள், அப்பாவிச்சிங்களவர்கள் என்று உருகும் இவர்களிலே ஒருவருமே இந்த அப்பாவிகளிலே எத்தனைபேர் ஸ்ரீலங்கா இராணுவத்தின் மேற்பார்வையின் கீழே இயங்கிய 'ஜிகாத்', ஊர்காவற்படையினர், தமிழர்தாய்நிலத்திலே குடியேற்றப்பட்ட பழைய சிறைக்கைதிகள் என்பதைப் பேசுவதில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதம், இந்துத்துவவாதிகளுக்கு எவ்விதத்திலும் குறைந்ததில்லை. ஒன்றை ஆதரித்து மற்றைதைமட்டும் தேர்ந்தெடுத்து எதிர்க்கும் அ. மார்க்ஸின் சீடர்களிடம் லும்பினி ஞானத்தை எதிர்பார்க்கமுடியாது லும்பன் தனத்தைத்தான் எதிர்பார்க்கமுடியும்.
ண்டும் கேட்கிறேன்; நாடுகடந்த அரசினை எதற்காக எதிர்க்கின்றார்கள்? உருத்திரகுமாரன் அதிலே இருக்கின்றார் என்பதற்காகமட்டுமேதானா? வேறேதும் வலிதான காரணமுண்டா? நாடுகடந்த அரசினைப் பேசுகின்றவர்கள் ஈழத்திலே இண்றைக்கு இருக்கும் நிலையிலே தமிழ்மக்களுக்கு உதவக்கூடாதென்றார்களா? அவர்களின் இன்றைய துயரங்களைப் பேசக்கூடாது; ஆயுதம் வாங்கி அனுப்புகிறோம்; வீட்டுக்கொரு பிள்ளையைத் தாருங்கள் என்றா சொன்னார்கள்? எதற்காக எதிர்க்கின்றார்கள்? அரசும் இந்திய அரசும் தருகின்றதையே ஏற்றுக்கொண்டு அவர்கள் வாழ்வதே அவர்களுக்கான அரசியலாகட்டும். 1948-->1968--> என்று பின்னோர் இண்டிபாட்டா இருபதாண்டுகளின் பின்னாலே, எமது கதை, கவிதை, கார்ல்மார்க்ஸின் விதைவிந்துபரவியது எவரிடம் எப்படி கட்டுரைகள், போஸுகள், பேட்டிகளுக்குப் பங்கம் வராமல் வந்தாலே போதுமானதென்பதாகவா? குறைந்தபட்சம், விடுதலைப்புலிகள் கயமைத்தனம் கொண்டவர்களென்றாலும் இவர்கள்மாதிரியாகப் பங்கம் இல்லாது அரசியல் பேசும் வசதியோடு இருக்கவில்லையே? ஈழத்தமிழர்களையே தீர்மானிக்கவிடுங்கள்; விடுங்கள் என்று சொல்கின்றவர்களுக்கு இவர்கள் இன்றைக்கு என்னசெய்தார்கள்? என்னசெய்தாய் என என்னிடம் கேட்டால், நான் சொல்லப்போவதில்லை; அதனாலே, அவர்களும் சொல்லவேண்டுமென நானும் வற்புறுத்தப்போவதில்லை.
ஈழம் என்பதே சாதிமான்யாழ்ப்பாணிகளுக்கு நேர்ந்த தரப்படுத்தலின் விளைவான பழிவாங்குதலே என யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களிலே நடந்த தமிழரின்பூர்வீகபிரதேசங்கள் பறிபோதலையெல்லாம் கண்டுகொள்ளாமலே விட்டுவிட்டு ஆதவன் தீட்சண்யாபோன்றவர்களுக்குப் படம் காட்டிய தலித்தியவாதிகள் இவர்களுக்கும் சாதிமான்யாழ்ப்பாணிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் என்ன வேறுபாடு? அவரவர் அவரவருக்கான போராட்டங்களைத் தேர்ந்துகாட்டுகிறார்கள். ஆக வேலைவாய்ப்புகள்மட்டுமே இத்தனைநாட்களும் தமிழர்களுக்குகான முக்கியபிரச்சனையென்றால் சொல்ல ஏதுமில்லை. சீனாவும் இந்தியாவும் முதலீட்டு வேலை வாய்ப்புகளை உருவாக்கினாலென்ன, எவர் வடகிழக்கிலே வேலைவாய்ப்பினை உருவாக்கினாலென்ன, அதிலே வடகிழக்கிலேயிருக்கும் தமிழர்களுக்கு எத்துணை வாய்ப்பு என்பது முக்கியமானது; தவிர, இந்தவேலைவாய்ப்பு எந்தளவுக்கு அரசியல்ரீதியான ஈழத்தமிழர்களின் (சரி உங்களின் ஸ்ரீலங்கா தமிழர்களின்) எதிர்காலத்தினை நிச்சயப்படுத்தும்? "பொடியளெல்லாம் இயக்கத்துக்குப் போறங்களெண்டு தியேட்டரில புளூபிலிம் காட்டி, இரவின்மடியில் போட்டுத் திசைதிருப்பவேணும்" என்ற ஏதாவதிலே இப்போதைக்கு ஈடுபடச்செய்யும் வழிமுறைகளாகவே முடிந்துவிடுவதுபோதுமா? அரசியல்ரீதியான ஒரு முன்னெடுப்பு அவசியமேயில்லையா?
நான் சொல்லவருவதெல்லாம் இதுதான்; எல்லாவற்றுக்கும் பிரபாகரனையும் உருத்திரகுமாரையும் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருப்பது வெறுமனே எமது தப்புதலே. எனது கருத்தெல்லாம் ஸ்ரீலங்கா அரசினைச் ுட்டுவிரல்நுனியிலே வைத்திருக்க ஏதாவதொரு அகிலம் பரவிய அமைப்பு ஓரளவு திட்டத்துடன் அவசியமென்பதுமட்டுமே. அது நாடுகடந்த அரசானாலுஞ்சரி; நாடு கனன்ற ஆலானுஞ் சரி. காஸ்பர்ராஜும் பா.ராகவனும் டைனோவும் லக்கிலுக்கும் இன்னபிற தமிழகத்தலைவர்களும் அதைச் செய்யப்போவதில்லை என்பதே பரபரப்பு யதார்த்தம்; ஆங்! ஷோபாசக்தி, அ. மார்க்ஸ், தலித்திய, பெண்ணிய, புண்ணிய, மண்ணிய, என்னிய ஏனைய பிறவுங்கூட ;-)
Tuesday, May 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
arumai nanba
ReplyDeleteHi Vasanth,
ReplyDeleteApology for typing in English, but having headache and wanted to share my views/questions fast as my typing in Tamil requires some extra effort (I know these are lame excuses) as I was going through the post.
My questions/views are mainly around yours and Ramani's views on the Transnational Government:
Since you also confirmed your views matches Ramani's, let me start with the transnational government. On what basis this organization is going to make any effect on the current crisis? It was just started because Prabhakaran is no more and the credentials of the organizers is really questionable.
Ramani didn't even mention about the poll malpractices and he didn't even touch Shobha's views on the % of people cast their votes. If this is the reception this org. is going to get, what effect it is going to create as a political force?
I agree with you regarding, just because this org. exists, SL government is going to punish the Tamil people in SL. As far as Rajapakshe concerned, this org. is nothing but a farce. If the organizers think that they are in parallel to PLO they are jokers.
>>காஸ்பர்ராஜும் பா.ராகவனும் டைனோவும் லக்கிலுக்கும் இன்னபிற தமிழகத்தலைவர்களும் அதைச் செய்யப்போவதில்லை என்பதே பரபரப்பு யதார்த்தம்;
- I don't know about KasperRaj (where were these guys when Tigers were in full flow?), but the rest of the gang never claimed (or even thought about) they are going to change anything :). A.Marx...perhaps Ramani wanted to end his post in a very light mood :).
In my opinion, Shobha Sakthi approached this Transnational Govt in the right angle, but one thing he disappoints is taking the crisis to the next political level (as Ramani's "எனது கருத்தெல்லாம் ஸ்ரீலங்கா அரசினைச் ுட்டுவிரல்நுனியிலே வைத்திருக்க ஏதாவதொரு அகிலம் பரவிய அமைப்பு ஓரளவு திட்டத்துடன் அவசியமென்பதுமட்டுமே). His post becomes a mud slinging rather than providing his alternate views.
Thank you.
Regards,
Rajesh
ராஜ் சந்த்ரா,
ReplyDeleteநீங்கள் எழுப்பியுள்ள பிரச்சனைகள் குறித்து கிட்டதட்ட என் பதிலை மேலே சொல்லியிருக்கிறேன்.
எனக்கு இந்த நாடு கடந்த அரசு மீது நம்பிக்கைகள் என்று எதுவுமே இல்லை. நம்பகதன்மை குறித்தும் சொல்ல எதுவும் இல்லை. சொத்துக்களை காப்பாற்றுவதற்காக உருவானது என்கிறார்கள். அதில் என்ன தவறு என்கிற கேள்வியிலிருந்து தொடங்கலாம். இந்த சொத்துக்களை காப்பாற்றுவது என்பதை (பெரியார் சொத்துக்களை காப்பாற்ற மணியம்மையை மணந்தார் என்பதை போல) ஒரு வெத்து குற்றச்சாட்டாக சொல்லாமல், காப்பாற்றுவது என்பதற்கு என்ன பொருள், இந்த அமைப்பின் மூலம் அதை செய்வதில் என்ன பிரச்சனை என்பது குறித்து விளக்க வேண்டும். பல கோடிக்கணக்கான சொத்துக்கள் எங்கு போகிறது என்று தெரியாமல் மூழ்குவதை விட இந்த அமைப்பின் மூலம் காப்பாற்றுவதில் என்ன தவறு என்று எனக்கு புரியவில்லை. சொத்துக்கள் மட்டுமல்ல, கடந்த மே மாதத்திற்கு முன்பான ஆறு மாதங்களுக்கு மேற்கில் எழுந்த மக்கள் ஆதரவை என்ன செய்வது, அதை அப்படியே வற்ற விடுவதா என்பதும் முக்கிய கேள்வியாகும். ஆனால் அமைப்பு என்று ஆகிய பின் சொத்துக்களை கார்டியனாக காப்பாற்றி அனுபவிக்கும் வேலையை மட்டும் அமைப்பால் செய்ய முடியாது. அரசியல் பேசும் கட்டாயத்திற்கும் ஆளாகும். அது என்ன அரசியல் என்பதையும் அதன் சாதக பாதகங்களையும் விவாதிப்பதும் விமர்சிப்பதும்தான் செய்ய வேண்டிய வேலையாகும் என்று நான் நினைக்கிறேன்.
சோபாசக்தி விமர்சிக்கவில்லை, இந்த அமைப்பின் இருப்பையே அயோக்கியத்தனம் பாசிசம் என்பதாக அவர் வாதங்கள் போகிறது. இல்லையென்று சொல்லி எதிர்தரப்பை உருவாக்க என்னிடம் தர்க்கம் எதுவுமில்லை. ஆனால் ஆளும் இந்திய இலங்கை அரசு, அதனுடன் ஒட்டியுள்ள தமிழ் அரசியல் பேசுபவர்கள் தொடங்கி திமுக அரசு வரை யாருக்கும் எந்த நியாயமும் நம்பகதன்மையும் கிடையாது. அவர்களின் இருப்பை அங்கீகரித்து விட்டே விம்ர்சனம் பேசும் போது, இந்த விளையாட்டு அமைப்பை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய தேவை என்ன? இலங்கையில் நடந்த தேர்தலில் நடக்காத முறைகேடா? ஒரு இறையாண்மை கொண்டதாக கற்பித்து கொண்ட, உலக அங்கீகாரம் பெற்ற நாட்டின் தேர்தலில் பெரும்பான்மை மக்கள் வாக்களிக்காத போது அது லெஜிடிமைஸ் ஆவதும், புலம் பெயர்ந்த நாட்டில் எந்த அங்கீகாரமும் இல்லாத, என்ன பயன் என்றே தெரியாத நிலையில் இத்தனை பேர்கள் வாக்களித்த பின்பும் இந்த நுணுக்கமான கேள்வி எழுவதும் என்ன அரசியல் என்று புரியவில்லை. இலங்கை வறலாற்றில் ஆளும் அரச பாசிசத்தின் உச்சத்தில் இருப்பது இன்றய அரசு. அதனுடன் உரையாட வேண்டும், மகிந்தவை நோக்கி உரக்க குரல் எழுப்ப வேண்டும் என்று சொல்லும் விவேகம் உள்ள சோபாசக்திக்கு, இந்த பொம்மை அரசிடம் மட்டும் எல்லா தார்மீகம், கடந்த கால நிலைபாடுகள் குறித்த கறாரான கேள்விகள் எல்லாம் இருப்பது மட்டுமே பிரச்சனை. ஷோபாசக்தி தமிழ் சூழலில் மட்டும் இந்த விமர்சனத்தை வைத்தால் நியாயமாக தோன்றலாம். ஈழப்பிரச்சனை குறித்து மகா அயோக்கியதனமாக மட்டுமே எழுதியுள்ள ஆங்கில பத்திரிகைகளுக்கு அளிக்கும் பேட்டியில், தங்கள் எதிர்ப்பும் (நாடு கடந்த அரசுக்கான) உலகளாவியதாக இருக்கும் என்கிறார். (அடுத்த பின்னூட்டத்தில் தொடர்ச்சி)
இதுவரை எழுந்திருக்க கூடிய நம்பிக்கைகள் அனைத்தையும் கொன்று புலிகள் தங்களை முன்வைத்த ஒற்றை நம்பிக்கையை விதைத்தார்கள். அவர்கள் அழிந்த பின்பு வெறுமையும் குழப்பமும் மட்டுமே மிஞ்சியுள்ளது. இந்த நாடு கடந்த அரசு கேபி முதலில் முன்வைத்த ஐடியாதான். ஆயுதம் எடுக்க போவதாகவோ, இலங்கையில் போரையோ கலகத்தையோ துவங்கவோ தூண்டவோ இல்லாமல், மேற்கு நாடுகளுடனான உறவு, அழுத்தம் மூலமாக ஒரு அரசியல் செய்வதில் என்ன தீங்கு இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை. பயங்கரவாத அமைப்பு என்றில்லாமல் ஜனநாயகம் என்று ஒப்புக்கு (எல்லா இடத்திலும் ஜனநாயகம் என்பது குறிப்பிட்ட பொருளில் ஒப்புக்கு உள்ளதுதான்) பேசி இன்றய உலக சூழலில், குறிப்பாக சீனா, ஈரான் போன்றவற்றுடன் இலங்கை கொண்டுள்ள உறவு சூழலில் மேற்கை பயன்படுத்துவது ஒரு விவேகமான செயல்தான். நிச்சயமாக அது இன்றய முதலாளித்துவ மேற்கு அரசியலை சாதகமாக பயன்படுத்தும் வேலைதான் (அதாவது ஒருவேளை இன்னும் சில ஆண்டுகளில் ஒரு சீரியசாக கருதக்கூடிய அரசியல் நடக்கும் என்றால்). ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பத்து பைசா நடைமுறை மதிப்பு கிடையாத அரசியலை விட (அதில் நியாயம் இல்லை என்று சொல்லவில்லை) நடைமுறையில் சிங்கள இனவாதத்தின் செயல்களை உலக கண்காணிப்பில் வைக்க ஒரு சாத்தியமாவது இந்த அரசியலில் உண்டு. ( ஒரு பக்கம் 2001க்கு பிறகு உலக யதார்த்தத்தை விவேகமாக பயன்படுத்த வேண்டும் என்கிறார் அ.மார்க்ஸ்; இன்னொரு பக்கம் மேற்கின் முதலீட்டிய அரசியலை பயன்படுத்துவதை காய்கிறார் ஷோபாசக்தி )
ReplyDeleteதொடர்....
ReplyDeleteஆனால், இவர்கள் எவரையும்விட நாடுகடந்த அரசு என்று நிற்பவர்கள் அதிகம் செய்கின்றார்கள், ஈழத்திலே உள்ளவர்கள் குறித்து கவனமாகவிருக்கின்றார்கள் என்பதாகச் சொல்லத்தான் சுட்டினேன். இவர்களிலே கடந்தகாலப்புலி ஆதரவாளர்களுமுண்டு; அரசியலிலே கலக்காமலேயிருந்தவர்களுமுண்டு என்றுதான் வாசிக்கின்றவரை தோன்றுகின்றது. (இதிலே எனக்கேதும் பங்கில்லை என்பதையும் சொல்லிவிடவேண்டும். அடுத்தது யாராவது வந்து, அப்படியேதும் சொல்லிவிடப்போகின்றார்கள் ;-)) நாடுகடந்த அரசிலே இருக்கும் "எம்பி"கள் என்ன சொத்தைச் சேர்க்கப்போகின்றார்கள்? "புலிகளின் சொத்தையெல்லாம் அவர்களே வைத்திருக்கின்றார்கள்; அவற்றைத்தாமே வைத்திருக்கத்தான் இத்தனை நாடகங்களும்" என்றால் நான் எப்பதிலையும் சொல்லமுடியாது. அதிலிருக்கும் ஒருவரை நான் நாகஅ வரமுன்னரே அறிவேன்; அவரும் அவர் மனைவியும் தங்களுடைய வாழ்க்கைத்தொழிலைக் கெடுத்துக்கொண்டு கிட்டத்தட்ட முழுநேரமாக இதையும் மருத்துவத்தொழில்களைப் பகுதிநேரமாக வாழ்க்கை வரும்படிக்கும் செய்துகொண்டிருக்கின்றார்கள். அவர்கள் புலிகள் புலிகள் என்று கத்தி நான் என்றைக்கும் கேள்விப்பட்டதில்லை. போன ஆண்டு நிறையப்பேரினைக் குற்றவுணர்விலேயும் இயலாமையிலே நமக்கும் ஒரு பங்குண்டு என்பதாலே எதையும் செய்யவேண்டுமென்பதாவும் இறக்கியிருக்கின்றது. இவர்கள் ஆயுதம் செய்வோமென்றும் சொல்லவில்லை; காகிதம் செய்வோமென்றும் சொல்லவில்லை. உடனடித்தேவைக்கு எதையேனும் செய்யவேண்டுமென்ற எண்ணத்திலுமிருக்கின்றார்கள். குறைந்தபட்சம், ஒரு தொழிலாளிக்கு முகத்திலே குத்தும் வன்முறையையும் முன்வைக்கவில்லை. இதிலே ஷோபா சக்திக்கு என்ன சிக்கல்?
நாடு கடந்த அரசு வேண்டுமென்பதைப் புலிகள் என்று திரித்துத் திசையைத் திருப்புவது மிகவும் முறையற்றது. ஸ்ரீலங்கா அரசும் இந்திய ஊடகங்களும் இதையே செய்ய மிகவும் முயன்றுகொண்டிருக்கின்றன என்பதை ஊடகங்களை வாசிக்கும்போது கண்டிருப்பீர்கள்.
Rajchandra
ReplyDelete1. நான் தற்போதுள்ள ஆட்களுடனான 'நாடு கடந்த அரசாங்கம்' என்றதினைத் தூக்கிப் பிடித்துச் சொல்லவில்லை என்று கண்டிருப்பீர்கள். ஆனால், அதனை எதிர்ப்பவர்கள்
அ. சரியான மாற்றுத்திட்டத்தைத் தருவதில்லை
ஆ. நாடு கடந்த அரசாங்கமும் அதனைச் சார்ந்தவர்களுமே எல்லாக்கெடுதிகளுக்கும் காரணமென்ற வகையிலே திரும்பத்திரும்பச்சொல்வது
இ. நாடுகடந்த அரசாங்கமென்று ஒன்றை அமைப்பதையும் நீண்டகாலநோக்கங்கள் இருக்கவேண்டுமென்பதையும் இலங்கையிலிருக்கின்ற தமிழர்களின் உடனடித்தேவைகளைக் கவனிக்காதே மறு என்பதாகத் திரித்தும் மறைத்தும் பேசுவது
ஈ. பாலஸ்தீனிய, தென்சூடான், (முன்னைய) கிழக்குத்தீமோர், செச்சினிய, (முன்னைய) தென்னாபிரிக்காவின் நாடுகடந்த அரசுகளை விடுதலை வேண்டும் அரசுகளென ஆதரிக்கின்றவர்களுக்கு ஈழநாடுகடந்த அரசு என மட்டும் என்ன சிக்கல் வருகின்றது?
நாடுகடந்த அரசாங்கத்தேர்தலிலே நடந்த குளறுபடிகளைப் பற்றி எனக்குத் தெரியாது. அங்குமிங்கும் அது பற்றிச் சொல்லப்படுவதை வாசித்தபோதுங்கூட சரியான தேர்தல் நடந்ததென்று வாதாடுவதல்ல என் நோக்கம்; ஆனால், ஸ்ரீலங்கா அரசு (& அதன் கூட்டான பாரத அரசு) செய்யும் நடவடிக்கைகளை அவதானித்துக்கொண்டிருப்பதற்கும் கடந்தகாலத்தின் இவற்றின் செயற்பாடுகளுக்கான 'நீதி'யைக் கோருவதற்கும் அகிலம்பரந்த ஒரு தமிழமைப்பு வேண்டுமென்பதே.
உருத்திரகுமாரன், விடுதலைப்புலிகளின் மீதான தனிப்பட்ட விருப்புவெறுப்புகளைவைத்துக்கொண்டு, நாடுகடந்த அரசு என்ற தேவையைத் தட்டிக்கொண்டிருக்கமுடியாது.
//>>காஸ்பர்ராஜும் பா.ராகவனும் டைனோவும் லக்கிலுக்கும் இன்னபிற தமிழகத்தலைவர்களும் அதைச் செய்யப்போவதில்லை என்பதே பரபரப்பு யதார்த்தம்;
- I don't know about KasperRaj (where were these guys when Tigers were in full flow?), but the rest of the gang never claimed (or even thought about) they are going to change anything :). A.Marx...perhaps Ramani wanted to end his post in a very light mood :).//
No I am dead serious (நீங்கள் டைனோ இல்லைத்தானே/ ;-))/
நான் சொன்னது அரசியல் என்ற அளவிலேயல்ல. பிரபாகரன் செத்தார் என்று செய்திவந்ததா வரவில்லையா என்ற நிலையிலே "வல்வெட்டித்....திருவே.... பிரபாகரன்: வாழ்வும் மரணமும்" என்று கசியும் சூட்டுக்குருதியிலே விற்பனைசெய்யும் பா.ராகவன் என்ற பேர்வழி என்றைக்காவது முன்னரோ பின்னரோ தன் காசுக்காகவல்லாது ஈழப்பிரச்சனையைப் பேசியிருக்கிறாரா? இதைக்கூட தன் நூலுக்கு விமர்சனம் என்று இணைத்துப்போடுமளவுக்கு ஒரு "சீப்"பான ஆள் அவர்.
டுவிட்டரிலேயும் பதிவுகளிலேயும் லக்கி லுக் என்ற ஆசாமியின் முன்னுக்குப் பின் முரணான ஈழம், பிரபாகரன் தொடர்பான பப்பிளிசிட்டி, வில்லேஜ் கிறுக்கல்களைப் பற்றி எழுதவிரும்பவில்லை. தொடர்ந்து கொஞ்சம் சுரணையுடன் வாசித்துக்கொண்டுவருகின்றவர்கள் உணர்வார்கள். இதற்குப் பதிலாகப் பதிவுபோடுகிறேன் பேர்வழி என இன்னொரு விளம்பரப்பதாகைப்பதிவு போடுவார். மேற்கிலே ஹம்பேர்கரும் மக்டானால்ஸும் தின்றபடி உண்ணாவிரதம் இருந்துகொண்டிருப்பார்கள் என்று மாயாவரத்தானுக்கு போன வாரம் ஒருநாள் உண்ணாமல் துக்கம் காட்டக் கேட்டவர்களைப் பற்றி நக்கல் அடிக்கின்ற ஆள்.
டைனோ (திரும்பவும்... நீங்கள் இல்லைத்தானே? ;-)) ரிவிட்டரிலே அடிக்கும் நக்கல்கள் உங்களுக்குத் தெரியாததில்லை.
(cont)
ReplyDelete>>(நீங்கள் டைனோ இல்லைத்தானே/ ;-))/ - இல்லை ஐயா :). நான் 'ராஜ் சந்திரா' (முழு பெயர் ராஜேஷ் சந்திரா) என்ற பெயரில்தான் பிளாக்-ல் உலா வருகிறேன். டிவிட்டரில் 'kabishraj' என்ற பெயரில். நாம் பாஸ்டன் பாலா வீட்டில் 2006/07-ல் சந்தித்திருக்கிறோம். பாரா-வின் எழுத்துக்கள் அவரின் பதிப்பு சார்ந்த வியாபார வட்டத்தில் மட்டுமே என்பதால் என்னைக் கவருவதில்லை. அதனால் அவரின் ஆழமில்லாத அரசியல் பதிவுகள்/புத்தகங்கள் நான் படிப்பதில்லை. டைனோ-வோடு டிவிட்டரில் அமெரிக்க அரசியல் பற்றி விவாதம் புரிவது உண்டு. மற்றபடி ஈழம் பற்றி வசந்துடன் மற்றும் உங்களுடன் மட்டுமே பேசுகிறேன் (வசந்த் மற்றும் நீங்கள் திட்டினாலும் முகத்துக்கு நேராக (சரியான வாதத்துடன்) திட்டுவதால்). லக்கி பற்றி - No comments. ஆனால் இவர்களின்(பாரா/லக்கி) கருத்துக்கள் சென்றடையக் கூடிய வீச்சு எவ்வளவு பரந்துபட்டது/அபாயகரமானது என்பதை அறிந்திருக்கிறேன்.
நான் தமிழக எழுத்தாளர்களின் (?) உளறல்களுக்கு குற்றவாளியாக உங்களைப் போன்றவர்களைதான் சுட்டுவேன். உங்களைப் போன்றோர் அங்கே வாழ்ந்த/இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் இதை சரியாக பரப்பாதபோது இது போன்ற காளான்கள் பெருகத்தான் செய்யும். மத்திய கிழக்கு விமர்சங்களில்/எழுத்துக்களில் என்னால் தைரியமாக மேற்கத்திய எழுத்தாளர்களை நிராகரிக்க முடிவதற்கு காரணம் மத்திய கிழக்கு எழுத்தாளர்களின் எழுத்துக்கள் வெகு எளிதாகக் கிடைபதினால். ஈழப் பிரச்சினையில் அக்கறை உள்ள தமிழக மக்களுக்கு அவ்வாறு நடப்பதில்லை.
வசந்த்: உங்கள் பதிவில் இவ்வளவு எழுத வாய்ப்பளித்தமைக்கு நன்றி. ரமணி: பாஸ்டன் வரும்போது அவசியம் தொடர்பு கொள்ளுங்கள் (kabishraj@gmail.com).
மிக்க நன்றி.
வசந்த் & ரமணி,
ReplyDeleteவிரிவான/பொறுமையான பதில்களுக்கு மிக்க நன்றி.
வசந்த்: நாகஅ-வின் செயல்களின் பலன் தெரிய சிறிது (அல்லது தலைமையைப் பொறுத்து நீண்ட ) காலம் ஆகும். ஆனால் உடனடித் தேவையாக போரில் பாதிக்கப்பட்ட/நசுக்கப்பட்ட மக்கள் நிலையை மேற்க்கத்திய நாடுகளிடம் (குறிப்பாக பிரான்ஸ், கனடா) எடுத்து சென்றுவிட்டு தேர்தலை சந்தித்திருந்தால் மக்களின் நம்பிக்கையை இன்னும் பெற்றிருக்கலாம். இப்போதைய ஐ.நா செயல்பாடும் எவ்வளவு பலன் தரும் என்று புரியவில்லை. மற்றபடி உங்களின் விரிவான பதில்களில் ஒத்துப் போகிறேன்.
ரமணி: உங்களின் 'ஈழநாடுகடந்த அரசு என மட்டும் என்ன சிக்கல் வருகின்றது?'...சிக்கல் என்னைப் பொறுத்தவரை எத்தனைப் பேர் இந்த நாகஅ-வின் முயற்சியை வரவேற்கிறார்கள்? மற்ற அரசுகளுக்கு (உதாரணமாக பாலஸ்தீனிய) உள் மற்றும் வெளி நாடுகளில் உள்ள ஆதரவும் அதில் மக்கள் காட்டும் ஈடுபாடும் தெரிந்ததே. இப்போதைய இலங்கை வாழ் மக்களின் ஒரு நாள் வாழ்க்கையே நரகம் என்னும் நிலையில் இந்த அரசு அமைப்பு முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் கேள்வி ஆரம்பமாகிறது. ஒரு அமைப்பு அழிந்து மற்றும் ஒன்று உருவாகியதால் immediate impact எதுவும் மக்களுக்கு கிடைக்கவில்லை. அதில் பணியாற்றுபவர்களின் நோக்கங்கள் உயர்வானவையே என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. தெற்காசிய நாடுகளை சமாளித்து(முக்கியமாக இந்தியா) தமிழர்களின் வாழ்க்கையை புனருத்தாரணம் செய்ய இன்னும் aggressiveness தேவை. இனியாவது ஆரம்பித்தால் நல்லது. (cont)
Raj Chandra
ReplyDeleteI was just teasing about dynobouy. That's all. I certainly know you though I do not know it is you 'kabishraj'.
n the rest, let me write a post sometime in coming week.
இன்றய ஷோபா சக்தியின் ’எம்.ஜி.ஆர். கொலைவழக்கு’ & தியாகு-ஷோபாசக்தியின் ’கொலை நிலம்' நூல்கள் திறனாய்வு கூட்டம் பற்றிய பதிவு.
ReplyDeleteஷோபாசக்தியின் 'எம்ஜியார்' கொலை வழக்கு' தொகுப்பு பற்றி பேசிய ராமானுஜம், ஷோபாசக்தியின் சிறுகதைகளில் புனைவுக்கும், யதார்த்தம் சார்ந்த தகவல்களுக்கும் இடையேயான மயக்கம் பற்றி பேசிய ஓரிரு பாயிண்ட்கள் ஓகே. 'எம்ஜியார் கொலைவழக்கு' சிறுகதையை சத்தியக்கடிதாசியில் நான் படித்துள்ளதை கொண்டு பார்த்தால் ராமானுஜம் பல தகவல் பிழைகளுடன் பேசினார். ('தோழர் அசாதி'யும் அதை குறிப்பிட்டார்.) ஆனால் அவர் நேரடியாக படித்து காட்டிய பத்திகளை வைத்து பார்த்தால், சத்தியக்கடிதாசியில் முதலில் எழுதிய கதையை, ஷோபாசக்தியே பின்னர் மாற்றி மீண்டும் எழுதி தொகுப்பில் சேர்த்தாரோ என்று தோன்றுகிறது. அது எப்படியிருப்பினும் 'எம்ஜியார் கொலை வழக்கு' என்ற சிறுகதை தமிழ் இலக்கியத்தின் மிக உச்சமான சாதனை சிறுகதை என்பது என் கருத்து. ஆதவன் தீட்சண்யா, ராமானுஜம் இருவரும் திறனாய்வு என்று பொருளில் எந்த நியாயமும் அந்த புனைவுக்கு செய்யவில்லை. அதிலும் ஆதவன் தீட்சண்யாவின் கோலங்கள் ரேஞ்சுக்கு தொடர்ந்த நீண்ட மொக்கையிலிருந்து தப்பிக்க முடியாத ஒரு இக்கட்டான இருக்கையில் நான் அமர்ந்திருந்தேன். (பேச்சை சுருக்கமாக முடிக்க வேண்டியிருந்ததற்கு அவர் வருத்தம் தெரிவித்தார்.) ஷோபாசக்தியை அவர் நிரம்ப பாராட்டினாலும், ஷோபாவின் புனைவில் வரும் நிகழ்வுகளை முன்வைத்து அவர் செய்த ஒப்புமைகளின் அசட்டுத்தனத்தை ஷோபாசக்தியின் புனைவு திறனை சிலாகிக்கும் யாரலும் சகிக்க முடியாது. தோழர்.கோவை ஈஸ்வரன் இடது சாரி பார்வையில் -கிட்டதட்ட தியாகுவின் பார்வையில்- 'விமர்சனத்துடனான புலி ஆதரவு' என்கிற நிலைபாட்டிலிருந்து பேசினார். நான் கவனமாக கேட்டாலும் புதிதாக எதுவும் கிட்டவில்லை. 'தோழர். அசாதி' இறுதியில் பேசிய நீண்ட பேச்சு துவக்கத்தில் பரிச்சயமான தளத்தில் சென்றாலும் திடீரென்று மிகுந்த சஸ்பென்ஸை கொண்டு குழப்பியது. உதாரணமாக அண்மையில் நடந்த சுமார் 6 நிகழ்வுகளை பட்டியலிட்டு அவற்றுக்கு இடையேயான தொடர்புகள் என்றெல்லாம் அவர் பேசியது ரொம்ப திரில்லிங்காக இருந்தது. 'இதெல்லாம் ஏன் நடகிறது?' என்று வேறு கேட்டார். ('எல்லாம் விதிப்படி நடக்கிறது.' என்று பதில் சொல்லலாமாவென்று தோன்றியது.) அவர் எல்லாவற்றையும் மிக நேர்மையுடனேயே கேட்டதாக நான் நினைத்ததால், இந்த கேள்விகள் நம்மையும் குடைவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று இடையில் கிளம்பி வீடு வந்து சேர்ந்தேன்.